Header Ads



2 நிபந்தனைகளை' நிறைவேற்றும் வரை, ரணிலுடன் எந்த பேச்சும் இல்லை- கஜேந்திரகுமார் எம்.பி


தற்போது கைது செய்யப்பட்டுள்ள “ஜோசப் ஸ்டாலின்” உட்பட அனைத்து போராட்ட செயற்பாட்டாளர்களையும் விடுதலை செய்ய வேண்டும், தற்போதைய அவசரகால சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டும், இந்த இரண்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எவ்வித கலந்துரையாடலிலும் ஈடுபடப்போவதில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி ஆட்சி அமைப்பது தொடர்பில் எதிர்வரும் 10ஆம் திகதி பிற்பகல் கலந்துரையாட வருமாறு ஜனாதிபதி அக் கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிலையிலேயே கஜேந்திரகுமார் எம்.பி இக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

பிரதமராக இருந்த போது ரணில் கூறியதற்கும், அவர் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் காலி முகத்திடல் போராட்டத்தை நசுக்கியதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

காவியன்

No comments

Powered by Blogger.