Header Ads



அடக்குமுறையை நிறுத்து என ஆர்ப்பாட்டம் செய்த 25 பேர் கைது, பொலிஸாரால் கண்ணீர்ப் புகை பிரயோகம்


அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கொழும்பில் இன்று (30) நடத்திய  ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்ட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.


அடக்குமுறைகள் நிறுத்தப்பட வேண்டுமெனவும் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்டோரை விடுவிக்க வேண்டும் என்றும் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.


மருதானையில் ஆரம்பித்த ஆர்ப்பாட்டப் பேரணியைக் கலைக்க பொலிஸாரால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்த்கது.

1 comment:

  1. ஜனநாயக ரீதியாக பொதுமக்கள் அரசாங்கத்தின் அடாவடித்தனத்தை அமைதியாக எதிர்க்கும் போது அவர்களைக் கைது செய்வது அரசாங்கம் செய்யும் மிகப் பெரிய தவறாகும். அது நாட்டை உலக அரங்கில் இலங்கையைத் தனிமைப்படுத்துவதோடு உலக மட்டத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு பெரும் எதிர்ப்பையும் அபகீர்த்தியையும் கொண்டுவரும். இறுதியில் மனித உரிமை மீறல் குற்றத்தை இழைக்கும் பாரிய நெருக்கடிக்கு இலங்கையைத் தள்ளிவிடும். இந்த பாரதூரமான பாதிப்பை ரணில் அரசாங்கம் விளங்காமல் செயல்படுவது தான் பொதுமக்களாகிய எமக்குப் பெரும் ஆச்சரியத்தையும் விரக்தியையும் தருகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.