ஒரு லீட்டர் எரிபொருளை 250 ரூபாவிற்கு விநியோகிக்கலாம் என்ற கருத்து தொடர்பில் விசாரணை
ஒரு லீட்டர் எரிபொருளை 250 ரூபாவிற்கு விநியோகிக்க முடியும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்த கருத்து தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கோப் குழுவின் பரிந்துரைக்கமைய இந்த விசாரணை நடத்தப்படுவதாக கணக்காய்வாளர் நாயகம் W.P.C. விக்ரமரத்ன குறிப்பிட்டார்.
அண்மையில் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை கோப் குழுவிற்கு அழைத்த போது, அனைத்து வரிகளுடன் ஒரு லீட்டர் எரிபொருளை 250 ரூபாவிற்கு விநியோகிக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
எரிபொருள் விலை தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு அறிக்கை, மேலதிக விசாரணைகளின் நிமித்தம் எரிசக்தி அமைச்சு மற்றும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment