Header Ads



14 வயதில் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவன்


14 வயதில் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவன் ஒருவனை பற்றிய செய்தி இன்று கிடைத்தது.


கடவத்தை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட தெவும் சன​ஹஸ் ரணசிங்க என்ற மாணவனே இவ்வாறு இவ்வருடம் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளான்.


குறித்த மாணவன் வர்த்தகப் பிரிவின் ஊடாக இவ்வருடம் உயர்தரப் பரீட்சையில் தோற்றி மூன்று B சித்திகளைப் பெற்று சித்தியடைந்துள்ளான்.


05 மாத குறுகிய காலத்தில் பரீட்சைக்குத் தயாராகி இந்த விசேட சித்தியைப் பெற்றதாக குறித்த மாணவன் தெரிவித்துள்ளான்.


தெவும் சன​ஹஸ் இதற்கு முன்னர் 08 ஆம் தரத்தில் கல்வி கற்கும் போது சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


07 மாத குறுகிய காலத்தில் அதற்குத் தயாராகியிருக்கும் குறித்த மாணவன் சாதாரண தரப் பரீட்சையில் 5 A, 2 B மற்றும் 1 C தேர்ச்சியை பெற்று பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.

No comments

Powered by Blogger.