Header Ads



ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸை விற்பதற்கு தீர்மானம், மொத்தக் கடன் 1.126 பில்லியன் டொலர்கள் என அறிவிப்பு


ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் Catering (சமையல் நிர்வாகம்) மற்றும் Ground Handling (தரை கையாளுகை) நிறுவனங்களின் 49% பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளருக்கு விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.


தேசிய விமான சேவையான ஶ்ரீ லங்கன் விமான சேவையின் 51% பெரும்பான்மை பங்குகளை அரசாங்கம் வைத்திருக்குமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


அதற்கமைய, ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் கேட்டரிங் மற்றும் கிரவுண்ட் ஹேண்ட்லிங் நிறுவனங்களின் 49% பங்குகள் மற்றும் நிர்வாகத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு தங்களது முன்மொழிவுகளை முன்வைக்குமாறு அழைப்பு விடுக்கப்படவுள்ளதாகவும், இது தொடர்பில் முதலீடு செய்யுமாறு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிவித்துள்ளார்.


ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மொத்தக் கடன் 1.126 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (ரூ. 401 பில்லியன்/ ரூ. 40,100 கோடி) எனவும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்தார். (1 பில்லியன் = 100 கோடி)

No comments

Powered by Blogger.