குடும்பம் ஒன்றின் மாதாந்தம் நுகர்வுக்கான செலவு, ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பு
இலங்கையில் வசிக்கும் சாதாரண குடும்பம் ஒன்றுக்கான மாதாந்தம் நுகர்வுக்கான செலவு தொடர்பான தகவல்களை புள்ளவிபரவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அந்தவகையில், சாதாரண குடும்பம் ஒன்றுக்கு மாதாந்தம் நுகர்வுக்கான செலவு ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை பேராதனை பல்கலைகழகத்தின் பொருளாதார, புள்ளவிபரவியல் ஆய்வுகள் பிரிவினால் மேற் கொள்ளப்பட்ட ஆய்வின் போதே குறித்தவிடயம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், 2019 ஆம் ஆண்டில் சாதாரண குடும்பம் ஒன்றுக்கு மாதாந்த நுகர்வுக்கான செலவு 63000 ரூபாவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் தற்போது குறித்த தொகை 47000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வசந்தஅத்துகோரல தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளமையினால் இந்த தொகை மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment