Header Ads



சர்வகட்சி அரசாங்கத்தை நிறுவ, சகல Mp க்களுக்கும் ரணில் கடிதம் அனுப்பினார்


சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று -29- அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 3ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.

நேற்று (28) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்ற அமர்வுகள் முடிவடையும் வகையில் ஜனாதிபதி விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.

பாராளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடர் ஒகஸ்ட் 3ஆம் திகதி காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒகஸ்ட் 3ஆம் திகதி ஆரம்பமாகும் பாராளுமன்றத்தின் 3வது அமர்வில் உரையாற்றுவதற்கு ஜனாதிபதி தயாராக உள்ளார்.

No comments

Powered by Blogger.