Header Ads



டலஸுக்கு ஆதரவளித்த பொதுஜன பெரமுன Mp க்களுக்கு உரையாற்ற அனுமதி மறுப்பு


அவசரக்காலச் சட்டம் மீதான முழுநாள் விவாதத்தின்போது டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த எம்.பிக்களுக்கு பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான வாய்ப்பை ஆளுங்கட்சி வழங்கவில்லை என அக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார். 

10 முறைகளுக்கு மேல் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என ஆளுங்கட்சியின் பிரதமக் கொறடாவிடம் நாம் கோரியிருந்தோம். எனினும் எமக்கு வாய்ப்பு வழங்க அவர் மறுத்துவிட்டார் எனவும் தெரிவித்தார். 

கொழும்பில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், மே 09ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின்போது நேரடியாக நானே பாதிக்கப்பட்டிருந்தேன். எனது வீடு, காரியாலயம் என அனைத்தும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. ஆனாலும் வெறுப்பற்ற அரசியலையே நான் செய்து வருவதாலும் ஜனநாயகத்தை மதிப்பதாலும் அவசரக்காலச் சட்டத்துக்கு எதிராகவே நான் வாக்களித்திருக்கிறேன் எனவும் விளக்கமளித்தார். 

No comments

Powered by Blogger.