Header Ads



ஜனாதிபதியின் காதை பிடித்து அவரை இழுத்திருப்பேன், அவர் என்னுடன் பேச விரும்பினார், நான் Live வழங்க விரும்பினேன்


கடந்த புதன்கிழமை ஜனாதிபதி மாளிகைக்குள் செல்ல முடிந்திருந்தால், ஜனாதிபதியை அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியே இழுத்து வந்திருக்க முடியும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

“நான் ஜனாதிபதியை அவரது காதில் அல்லது கையால் பிடித்து அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியே இழுத்திருப்பேன். ஜனாதிபதி உண்மையில் அந்த நேரத்தில் என்னுடன் பேச விரும்பினார்.

இதன்போது, அவர் வெளியே வர வேண்டும் என்றும், அவருடன் உரையாடும் போது நான் சமூக ஊடகங்களில் நேரலையில் செல்ல வேண்டும் எனவும் பதிலளித்தேன்.

இவ்வாறு தெரிவித்ததன் காரணமாக அந்த உரையாடல் நடைபெறவில்லை என அவர் கூறினார். தம்முடைய செயலை இரகசியமாகத் திட்டமிட்டதால் அன்று உளவுத்துறை அதிகாரிகளை ஏமாற்ற முடிந்தது.

சில நாட்களாக அந்த பகுதியில் சுற்றித் திரிந்தபோது ஜனாதிபதியின் இல்லத்திற்கு செல்லும் டச்சு மருத்துவமனையின் வழியைக் கண்டேன். இதன்படி மாளிகையை நெருங்க முடிந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜூலை 9 ஆம் திகதி நடைபெறும் போராட்டம் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான இறுதி கிளர்ச்சியாக இருக்கும். ஜூலை 9ஆம் தேதி நடைபெறும் இந்தப் போராட்டம், நாட்டின் தலைவர் ராஜினாமா செய்யும் வரை தொடர்ந்து நடைபெறும்.

இந்த போராட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் போராட்டக்காரர்களுடன் கலந்துக்கொள்ள வேண்டும்.

அதேவேளை, கட்சித் தலைவர்கள் முன்னோக்கி நடக்க வேண்டும். அவர்களே முதலில் கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பிரயோகங்களை எதிர்கொள்ள வேண்டும்.” என்றும் ஹிருனிக்கா கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.