இலங்கைக்கு கடன் கொடுத்த பங்களாதேஷ், IMF இடம் நிதி நிவாரணம் கேட்டு விண்ணப்பம்
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பங்களாதேஷ் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி நிவாரணம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் கொடுப்பனவு நிலுவை மற்றும் வரவு செலவுத் தேவைகளுக்காக இந்த நிதி நிவாரணம் கோரப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷின் வெளிநாட்டு கையிருப்பு ஒரு வருடத்திற்குள் 45.5 பில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 39.67 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பங்களாதேஷ் அரசாங்கம் இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment