ஆர்ப்பாட்டக்காரர்களை விஹாரமகாதேவி பூங்காவுக்குள் தள்ளி, Go Home Ranil போரட்டத்தை அனுமதிக்க ரணில் திட்டம்
பாராளுமன்றம், புது ஆரம்பத்துக்காக 24மணி நேரம் ஒத்தி வைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்சி தலைவர்களுடனான விசேட சந்திப்பில் எமக்கு கூறினார் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றம் 24 மணித்தியாலம் ஒத்தி வைக்கப்பட்டு மீள ஆரம்பிக்கப்படுவதன் மூலம் தனது அரசாங்கத்தின் கொள்கை உரையை ஆற்ற ஜனாதிபதி விரும்புவதாக நினைக்கிறேன். போராட்டக்காரர்கள் தமது "கோ-ஹோம்-ரணில்" போராட்டத்தை, தடையின்றி நடத்த கொழும்பு விஹாரமகாதேவி பூங்கா பிரதேசம் ஒதுக்கி தரப்படும் என்றும், தமது நல்லாட்சி காலகட்ட அசல் 19ம் திருத்த ஆவணம், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரமாக அரசியலமைப்புக்குள் கொண்டு வர விரும்புவதாகவும் ஜனாதிபதி எமக்கு தெரிவித்தார்.
மேலும் அரசாங்கத்தையும், பாராளுமன்றத்தையும், எம்பி க்களை கொண்ட துறைசார் குழுக்களை அமைத்து நடத்த விரும்புவதாகவும் கூறினார் என்று மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment