முஸ்லிம் மீடியா போரம் கடும் கண்டனம்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கொழும்பு காலி முகத்திடலில் நேற்று (22) வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட பதற்ற நிலையின் போது செய்தி சேகரிக்கச் சென்ற தேசிய மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்களின் கடமைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தப்பட்டதுடன் சர்வதேச ஊடக நிறுவனத்தின் ஒளிப்பதிவாளரும் தாக்கப்பட்டுள்ளார்.
இந்த செயற்பாட்டை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிப்பதாக போரம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு போரம் சார்பாக எமது ஆழ்ந்த கவலைகளை தெரிவித்துக் கொள்வதோடு, இந்த விடயம் தொடர்பில் நடுநிலையான விசாரணை ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம்.
இனிவரும் காலங்களில் இந்த ஒரு தடைகளும் இல்லாமல் ஊடகவியலாளர்கள் தமது கடமைகளைச் சுதந்திரமாகச் செய்வதற்கு அனைத்து தரப்பினரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கேட்டுக்கொள்கின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment