மஹிந்தவின் மரணத்திற்காக பட்டாசுகளுடன் காத்திருக்கும் மக்கள், இந்நாட்டில் மீளவும் பிறக்க கூடாது என பிரார்த்திக்கிறேன்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மரணிக்கும் வரையில் சிலர் பட்டாசுகளுடன் காத்திருப்பது மிகவும் ஓர் துர்ப்பாக்கிய நிலை என முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பிரபாகரனை கொன்ற போது அன்று பாற்சோறு சமைத்து, பட்டாசு வெடித்து கொண்டாடிய சிலர் இன்று மகிந்த மரணிக்கும் வரையில் பட்டாசுகளுடன் காத்திருக்கும் துர்ப்பாக்கிய நிலை உருவாகியுள்ளது.இதன் காரணமாகவே இந்த நாட்டில் மீளவும் பிறக்க கூடாது என பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவிடம் குறைகள் காணப்பட்டாலும் இந்த நாட்டின் தீர்மானமிக்க சேவைகளை ஆற்றிய வரலாற்று ஆளுமை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒருவரின் மரணத்தை கொண்டாடுவது நல்ல பண்பு கிடையாது, இவ்வாறான ஓர் தலைவர் மரணிக்கும் வரையில் காத்திருப்பது மிகவும் துயரமான ஓர் நிலைமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனிதர்கள் அன்றி விலங்குகள் இறந்தாலும் கொண்டாடி மகிழும் பழக்கம் தன்னிடமில்லை.பிரபாகரன் உயிரிழந்த தினத்தில் பலர் பட்டாசு கொளுத்தி கொண்டாடிய போதிம் தாம் அவ்வாறு செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒருவரின் மரணத்தை கொண்டாடுவது நல்ல பண்பு கிடையாது.மகிந்த ராஜபக்ச தன்னுடன் உரையாடியதாகவும் அவர் நல்ல சுகமாக இருக்கின்றார் எனவும் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Post a Comment