Header Ads



தம்மிக்கவை உடனடியாக பதவி நீக்க வேண்டும், ஜனாதிபதியிடம் ரணில் வலியுறுத்து


 அமைச்சரவை மரபுகளை மீறி தன் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்த தம்மிக்க பெரேராவை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இது தொடர்பான தனது நிலைப்பாட்டை பிரதமர், ஏற்கனவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குத் தெரியப்படுத்தியுள்ளார் எனவும் தெரியவருகின்றது.

நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம், உரிய திட்டம் இல்லை எனவும் , நிதி அமைச்சர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் எனவும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா நேற்றுமுன்தினம் அறிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே அவரை அமைச்சு பதவியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் பிரதமர் நேற்று(07) வலியுறுத்தியுள்ளார் என்று அறியமுடிகின்றது. 

இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என முதலீடு மற்றும் ஊக்குவிப்பு அமைச்சர் தமிக்க பெரேரா கேட்டுக்கொண்டார்.

இலங்கையின் நிதியமைச்சர் பேரழிவிற்குத் திட்டமிட்டுள்ளார் என சாடியுள்ள அவர், தற்போதைய டொலர் நெருக்கடியை தீர்க்க நிதி அமைச்சரிடம் எந்த திட்டமும் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.

பொருளாதார சவால்கள் அனைத்தும் டொலரில் தங்கி இருப்பதாக சுட்டிக்காட்டிய தமிக்க பெரேரா நிதியமைச்சர் நண்பர்களிடம் இருந்து கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

நாட்டிற்கு தேவையான பணத்தைக் கொண்டு வருவதற்கு நிதி அமைச்சரிடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. டொலர் சம்பாதித்தல், கடன் வாங்குதல், அவசரக் கடன்கள், கடன்களை பெறுதல் போன்ற அனைத்து விடயங்களையும் நிதியமைச்சர் தாமதப்படுத்தி வருவதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டியிருந்தார். Tw

No comments

Powered by Blogger.