ஆர்ப்பாட்டக்காரர்களின் உரிமையை நசுக்கியதற்கு ஐ.நா. கண்டனம், நிலைமையை மோசமாக்கும் என எச்சரிக்கை
காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க பலாத்காரத்தைப் பயன்படுத்தியமை குறித்து தான் மிகவும் கவலையடைவதாக இலங்கைக்கான ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டி தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களுக்கு ஆர்ப்பாட்டங்களை கண்காணிக்க உரிமை உண்டு என்றும் அவர்களின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்றும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
எதிர்ப்புகள் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமையை நசுக்கும் நடவடிக்கைகள் இலங்கையில் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரமின்மையை மோசமாக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரு பிரிவினரும் பரந்த பொது ஆலோசனைகளுக்கு இணங்க அமைதியான தீர்வுகளை அடைய அழைப்பு விடுத்ததுடன், அதுதான் முன்னோக்கிச் செல்லும் ஒரே வழி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment