மெழுகுவர்த்தி, டெலிபோன் வெளிச்சத்தில் இயங்கும் மெதிரிகிரிய மருத்துவமனை
மின்சாரம் துண்டிக்கப்படும் சமயங்களில் மெதிரிகிரிய ஆதார வைத்தியசாலையின் பணிகள் பெரும் பாதிப்பை எதிர்கொள்வதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின்வெட்டு நேரத்தில், மெழுகுவர்த்தி வெளிச்சத்திலும், செல்போன்களின் வெளிச்சத்திலும் மருத்துவமனை பணிகள் முன்னெடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .
இதனால் அவசர நோயாளிகள், சுவாச நோயாளிகள் மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படுபவர்களை பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு வைத்தியசாலை ஊழியர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். அதேசமயம் மின்சாரம் தடைபட்டால் உயிர்காக்கும் கருவிகளை இயக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும் பல்வேறு வெப்பநிலையில் சேமித்து வைக்க வேண்டிய மருந்துகள் உள்ளிட்ட பல மருந்துகள் மற்றும் மருந்துவ சாதனங்கள் பழுதடைவதாகவும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.மெதிரிகிரிய ஆதார வைத்தியசாலையின் மின்பிறப்பாக்கிக்கு ஒரு மணித்தியாலத்திற்கு சுமார் 25 லீற்றர் எரிபொருள் தேவைப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் சுமார் மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டினால் நாளொன்றுக்கு சுமார் 75 லீற்றர் எரிபொருள் தேவைப்படுவதாகவும், எரிபொருள் கிடைக்காததால் மின்வெட்டு சமயங்களில் மருத்துவமனை இருளில் மூழ்குவதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment