கையிருப்பில் உள்ள கொரோனா தடுப்பூசிகள், காலாவதியாக முன் அதனை ஏற்றிக் கொள்ளுங்கள்
கையிருப்பில் உள்ள கொரோனா தடுப்பூசிகள் காலாவதியாவதற்கு முன்னர், 4ஆவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, இலங்கையால் மீண்டும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய முடியுமா என்று உறுதியாக தெரியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட போதிலும், நான்காவது தடுப்பூசியை குறைந்த சதவீதத்தினரே பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
டொலர் தட்டுப்பாடு காரணமாக இலங்கை தடுப்பூசிகளை மேலும் இறக்குமதி செய்வது நடைமுறைச் சாத்தியமற்றது எனவும் எதிர்காலத்தில் நான்காவது டோஸைப் பெறாவிட்டால், பொதுமக்கள் மீண்டும் வைரஸ் தொற்றுக்கு ஆளாக நேரிடும் என்றும் தெரிவித்தார்.
எனவே, அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தை தொடர்பு கொண்டு தடுப்பூசி வழங்கப்படும் திகதிகளை விசாரிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தார்.
Post a Comment