Header Ads



டளஸுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தவர்களின் எண்ணிக்கை 113, ரணில் எப்படி வெற்றி பெற்றார்..? சந்தேகத்தை கிளப்பும் அநுரகுமாரவும், சுமந்திரனும்..!!


பாராளுமன்றில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்று, இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகினார்.

எனினும், இந்த வெற்றியை ரணில் எப்படி பெற்றார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது,

“பாராளுமன்றம் இன்னும் பொதுஜன பெரமுனவின் பிடியில் உள்ளது என்பதை நிரூபித்துள்ளது. அது தனது ஆணையை இழந்துவிட்டது.

பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்று நான் மீண்டும் கூறுகின்றேன்.

அனுரகுமார திசாநாயக்க நல்ல ஒரு கருத்தை முன்வைத்துள்ளார். அதாவது டளஸ் அழகப்பெருமவுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தவர்களின் எண்ணிக்கை 113க்கும் அதிகமாகும். அவ்வாறிருக்கு இந்த வெற்றி எப்படி சாத்தியமானது?” என்று பதிவிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.