ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் வருமா..? விமானநிலையம் சென்று பிரதிநிதிகளை வரவேற்ற விமல் வீரவன்ச
ரஷ்யாவிலிருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு இலங்கை தீர்மானித்துள்ள நிலையில் அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அந்நாட்டின் இரண்டு பிரதிநிதிகள் நேற்று நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். பஹ்ரைனிலிருந்து கல்ஃப் விமான சேவைக்கு சொந்தமான விமான மூலம் அவர்கள் நேற்று முற்பகல் 9.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச உள்ளிட்ட சிலர் விமான நிலையத்தில் மேற்படி அரசியல் பிரதிநிதிகளை உத்தியோகபூர்வமாக வரவேற்றுள்ளனர்.
நாட்டிற்கு எரிபொருள் கொள்வனவு செய்வது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசி மூலம் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
அதேவேளை, பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயல்படும் கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மம்பில உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் கொழும்பில் உள்ள ரஷ்ய தூதுவருடன் நாட்டுக்கு எரிபொருளை பெற்றுக் கொள்வது தொடர்பில் பேச்சு வார்த்தையொன்றை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.(
லோரன்ஸ் செல்வநாயகம்
Post a Comment