Header Ads



சிங்களத் தாய்மார்களிடம் பால் குடித்த, முஸ்லிம்கள் மீது நான் அன்பு செலுத்துகிறேன்


- ஏ.ஆர்.ஏ.பரீல் -


உயிர்த்த ஞாயிறு  தற்­கொலை குண்டு தாக்­கு­தல்­தாரி சஹ்ரான் மூன்று தட­வைகள் நெல்­லி­க­லைக்கு வந்து என்னைச் சந்­தித்­துள்ளார். நெல்­லி­க­லைக்கு அருகில் சஹ்­ரா­னுக்கு நிலை­ய­மொன்­றினை அமைப்­ப­தற்கு காணி தேவைப்­பட்­டது. அதற்­கான காணியை ஏற்­பாடு செய்­யு­மாறு என்னைக் கோரினார். அதற்கு நான் இட­ம­ளிக்­க­வில்லை. இது பற்றி ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவில் நான் சாட்­சி­ய­ம­ளித்­துள்ளேன் என ஜெய்­லானி கூர­க­ல­வுக்குப் பொறுப்­பான நெல்­லி­கல வத்­து­கும்­புரே தம்­ம­ர­தன தேரர் தெரி­வித்­துள்ளார்.


Truth with Chamuditha எனும் யூ டியூப் நிகழ்ச்­சியில் ஊட­க­வி­ய­லாளர் சமு­தித்­த­வு­ட­னான நேர்­கா­ணலின் போதே அவர் இவ்­வாறு கூறி­யுள்ளார். அவர் தொடர்ந்தும் தெரி­வித்­துள்­ள­தா­வது,


சஹ்ரான் ஓர் அடிப்­ப­டை­வா­தி­யென நாம் 2016 முதல் அறிந்­தி­ருந்தோம். என்­றாலும் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலில் சஹ்ரான் உயி­ரி­ழந்த பின்பே அவர் பயங்­க­ர­வா­தி­யென அறிந்து கொண்டேன். சிலர் இப்­போது சஹ்ரான் பற்றி கூறும் கதை­களைக் கேட்­கும்­போது எனக்கு சிரிப்பு வரு­கி­றது.


அர­சாங்­கத்தை பத­வியில் அமர்த்­து­வ­தற்கோ, பத­வி­யி­லி­ருந்து நீங்­கு­வ­தற்கோ நான் சாஹ்­ரானின் பெயரை பயன்­ப­டுத்­த­வில்லை.


கூர­கல பன்­சல நிறு­வு­வ­தற்கு இரா­ணுவம் உத­வி­யுள்­ளது. இதனை முழு நாடும் அறியும். நெல்­லி­கல பன்­ச­லையை நிறுவி 8 வரு­டங்கள் ஆகின்­றன.  கூர­க­லயில் பன்­சலை நிறு­வு­வ­தற்கு 15 ஆயிரம் இலட்சம் ரூபாய் செல­வி­டப்­பட்­டுள்­ளது.


ஒரு டாக்டர் மாத்­திரம் சைத்­திய நிறு­வு­வ­தற்­காக ஆயிரம் இலட்சம் ரூபாய் வழங்­கினார். இவ்­வாறு கூர­க­லக்கு பொது மக்­களே உதவி வழங்­கி­யுள்­ளார்கள்.

இந்த நேர்­கா­ணலின் முழு விபரம் வரு­மாறு :


நீங்கள் ‘ஏர்ல் குண­சே­க­ர­வுடன் இணைந்து புதையல் தோண்­டி­ய­தாக பர­வ­லாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றதே!

இல்லை ஏர்ல் குண­சே­கர எனது எதிரி. இதி­லி­ருந்தே தெரி­கி­ற­தல்­லவா? இந்தக் குற்­றச்­சாட்டு சோடிக்­கப்­பட்­ட­தென்று.

நெல்­லி­கல பன்­சலை திட்­டத்தை எதிர்த்­தவர் அவர். இது­வரை நான் அவ­ருடன் ஒரு­வார்த்­தை­கூட பேசி­ய­தில்லை.


அப்­ப­டி­யென்றால் இரா­ணுவ தள­ப­தியின் அர­சியல் திட்­டத்­தையா நீங்கள் முன்­னெ­டுக்­கி­றீர்கள்? அவ­ருடன் ஏன் இந்த நெருங்­கிய தொடர்பு?

இரா­ணுவ தள­பதி நாளைக்கு அர­சி­யலில் இறங்­கினால் நான் அவ­ரி­ட­மி­ருந்து தூர­மா­கி­வி­டுவேன். யார் கூறு­வது நான் அவ­ரது அர­சியல் திட்­டத்தை முன்­னெ­டுப்­ப­தென்று?


நீங்கள் ராஜ­ப­க்ஷ­வி­னரின் குழுவைச் சேர்ந்­த­வ­ரல்­லவா?

யார் கூறு­வது அப்­படி? எனது வாழ்க்­கையில் என்னை அதிகம் நோக­டித்­த­வர்கள் ராஜ­ப­க்ஷாக்கள். நெல்­லி­கல பன்­ச­லையை நிறு­வி­ய­போது ராஜ­பக்ஷ அரசு எமக்கு ஒரு வருட காலம் மின் இணைப்பை வழங்­கா­ம­லி­ருந்­தது.


முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக செயற்­பட்ட முதல் பெளத்த குரு நீங்கள். கூர­க­லயில் முஸ்லிம் மக்­களை விரட்­டி­ய­டித்­தீர்கள்.அப்­ப­டித்­தானே?

சமு­தித்த இப்­படிப் பேச­வேண்டாம். தெல்­தெ­னிய திக­னயில் முஸ்­லிம்கள் தாக்­கப்­பட்­ட­போது யட்­டி­நு­வர பகு­தியில் 21 பள்­ளி­வா­சல்­களை ஒரு கல்­கூட  எறி­யப்­ப­டாது பாது­காப்பு வழங்­கி­யவன் நான்.  இரவு பக­லாக இளை­ஞர்­க­ளுடன் இணைந்து இதற்­காக பாடு­பட்டேன். முஸ்­லிம்­களைப் பாது­காத்தேன்.


நெல்­லி­கல, கூர­கல திட்­டங்­க­ளுக்­காக முஸ்லிம் மக்­களின் காணி­களை அப­க­ரித்­தீர்கள் அல்­லவா?

யார் கூறு­வது? நான் முஸ்­லிம்­களின் காணி­களை  பணம் கொடுத்தே வாங்­கினேன். இன்று என்னால் காணி உறு­தி­களை காண்­பிக்க முடியும். முஸ்­லிம்கள் எனது தேவையை உணர்ந்து காணியின் பெறு­ம­தியை விட கூடு­த­லாக விலை கூறி பணம் பெற்­றுக்­கொண்­டார்கள். நான் ஒரு போதும் அவர்­க­ளது காணி­களை அப­க­ரிக்­க­வில்லை. நான்  அரச அதி­கா­ரங்­களைப் பெற்­றுக்­கொள்­ள­வில்லை. நான் ஒரு கொடி­யல்ல. ஒரு­மரம். எப்­போதும் உறு­தி­யா­கவே இருப்பேன்…

கூர­கல திட்­டத்தை முன்­னெ­டுக்­கும்­போது கூர­கல மக்­களின் விவ­சா­யத்­துக்­காக குள­மொன்றை அமைத்தேன். கூர­க­லயில் ஒரு வீடு கட்­டினேன். அது முஸ்லிம் ஒரு­வ­ருக்­காகும். அவரை அங்கு வசிக்கச் செய்தேன்.


உங்­க­ளுக்கு என் ஜி ஓ க்கள் மூலம் பணம் கிடைக்­கி­றதா?

ஒரு­போதும் இல்லை.


ஒரு முறை உங்­க­ளுக்கு இரத்­தி­னக்கல் கொத்­தொன்று கிடைத்­த­தாக கூறப்­ப­டு­கி­றது. அது இப்­போது எங்கே?

இதனை நீங்கள் அப்­ப­குதி மக்­க­ளி­டமே கேட்க வேண்டும். நான் இரத்­தி­னக்­கற்­களை எனது கண்ணால் கூட காண­வில்லை.


நீங்கள் சுக­போக வாழ்க்கை வாழ்­வ­தாக குற்றம் சுமத்­தப்­ப­டு­கி­றது. ஏற்­றுக்­கொள்­கி­றீர்­களா?

இல்லை. நான் துன்­பப்­படும் மக்­களை நேசிப்­பவன். அவர்­க­ளுக்­கா­கவே சேவை செய்­பவன்.


இன்று மக்கள் எரி­பொருள் இல்­லாமல், சாப்­பி­டு­வ­தற்கு வச­தி­யில்­லாமல் துன்­பப்­ப­டும்­போது கூர­க­லயில் பாரிய சிங்கம் ஒன்­றினை ஏன் நிர்­மா­ணித்­தீர்கள்? எங்­க­ளுக்கு இப்­போது சிங்கம் ஒன்று மட்­டும்தான் தேவையா?

கூர­க­லக்­காக நாம் 50 வரு­ட­கா­ல­மாக போராட்டம் நடத்­தியே வெற்றி பெற்­றுள்ளோம். கூர­க­லயை அர­சி­யல்­வா­தி­களே தங்­க­ளது சுய­ந­லத்­துக்­காக இது­வரை காலம் பயன்­ப­டுத்தி வந்­துள்­ளார்கள். இது அர­சியல் வாதி­களின் பிரச்­சினை.

கூர­க­லயில் சிங்கம் மாத்­தி­ர­மல்ல தர்ம மண்­டபம், சைத்­திய, பன்­சலை என்­றெல்லாம் நிறு­வி­யுள்ளேன். 30 அடி உய­ர­மான சிங்கம் அது. அதற்­காக சுமார் 30 இலட்சம் வரையில் செல­விட்­டுள்ளேன். இதற்கு இரண்டு இளை­ஞர்கள் உத­வி­னார்கள். அவர்­க­ளது செல­வி­னாலே நிறு­வப்­பட்­டது. எரி­வாயு பிரச்­சினை ஏற்­ப­டு­வ­தற்கு முன்பே இது நிர்­மா­ணிக்­கப்­பட்­டது.

கோல்­பேசில் போராடும் இளை­ஞர்­களை ஆத­ரிப்­பவன் நான். என்­னிடம் அர­சியல் இல்லை. ராஜ­ப­க்ஷாக்­களின் கூர­கல திட்­டத்­தையே நான் முன்­னெ­டுத்­த­தாக கூறப்­ப­டு­வது தவறு. இத்­திட்­டத்­துக்கு அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து நான் ஒரு சதம் கூட பெற்­றுக்­கொள்­ள­வில்லை. ஒரு சீமெந்து மூடை கூட­பெற்­றுக்­கொள்­ள­வில்லை. யார் இன­வா­தத்தை தூண்­டி­விட்டு ஆட்சி செய்­தார்கள் என்­பது எல்­லா­ருக்கும் தெரியும். அவர்கள் ஆட்­சி­யி­லுள்­ள­வர்­களே.

கூர­கல திட்­டத்தை நிறுத்தி விடு­வ­தற்கு நிறை­வேற்று அதி­கா­ர­முள்ள ஜனா­தி­ப­திக்கு அதி­கா­ர­மி­ருந்­தது. அதை கோத்­தா­பய ராஜ­பக்ஷ செய்­ய­வில்லை. ஒரு தடவை கூர­க­லக்கு விஜ­யமும் செய்தார். அவரால் நிறுத்த முடி­யு­மான காலத்தில் நிறுத்­த­வில்லை.

திகன தெல்­தெ­னிய கல­வ­ரத்தை நிறுத்­து­வ­தற்கு நான் அங்கு சென்­ற­தற்­காக என்னை தேச துரோகி என்­றார்கள்.

இன்று கூர­க­லக்கு சென்று பாருங்கள் நான் அமைத்த வாகன தரிப்­பி­டத்தில் தான் முஸ்­லிம்கள் வாக­னங்­களை நிறுத்­து­கி­றார்கள். நான் அமைத்த கழி­வ­றை­க­ளையே பயன்­ப­டுத்­து­கி­றார்கள். முன்பு முஸ்­லிம்கள் தமது கட­மை­க­ளுக்­காக காடு­க­ளுக்கே சென்­றார்கள்.

இன்றும் தப்தர் ஜெய்­லா­னியின் மின்­வி­ளக்­குகள் பன்­ச­லையின் மின் இணைப்பின் மூலமே எரி­கின்­றன. நான் ஒரு இன­வா­தி­யல்ல.

முஸ்­லிம்­களின் மர­பு­ரிமை பிர­தே­சத்தில் கூர­கல திட்­டத்தை நிர்­மா­ணித்­துள்­ளீர்கள்?

யார் கூறி­யது. அபு­சா­லியே இப்­ப­கு­தியை தனது சொந்த இட­மாக பாவித்து வந்தார். இந்த இடத்­திலே பள்­ளி­வாசல் நிறு­வப்­பட்­டது. இது ஒரு குடும்பம் ஆட்சி செய்த பிர­தேசம். குடும்­பத்தின் பிரச்­சி­னையை நாட்­டுக்கு கொடுத்­துள்­ளார்கள். இன­வாதப் பிரச்­சி­னை­யி­லி­ருந்து கூர­க­லயை விடு­வித்­ததா நான் செய்த குற்றம். முஸ்­லிம்­க­ளுக்கு எந்த அநி­யா­யமும் நான் செய்­ய­வில்லை. நாளைக்­கென்­றாலும் அவர்­க­ளுக்கு பள்­ளி­வா­ச­லுக்கு சென்று வழி­பா­டு­களில் ஈடு­பட முடியும்.

எப்­போதும் கூர­க­லயில் இன ஒற்­று­மை­யையும், சக வாழ்­வையும் ஏற்­ப­டுத்­த­வ­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளையே முன்­னெ­டுத்­துள்ளேன்.


சவேந்­தி­ர­சில்வா ஜனா­தி­ப­தி­யா­வ­தற்­கான முன்­னெ­டுப்­பு­க­ளையா நீங்கள் மேற்­கொள்­கி­றீர்கள்?

ஒரு­போதும் இல்லை. அர­சியல் என்­னிடம் இல்லை. எந்த அர­சியல் லாபங்­க­ளையும் நம் பெற்­றுக்­கொள்­ள­வில்லை. நான் சுதந்­திர பிக்கு.


சஹ்ரான் நெல்­லி­க­லக்கு வருகை தந்து காணி பெற்­றுக்­கொள்­வ­தற்­காக உங்­களை அச்­சு­றுத்­தி­ய­தாக கூறப்­ப­டு­கி­றதே?

ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவில் நான் 6 மணித்­தி­யாலம் சாட்­சி­ய­ம­ளித்­துள்ளேன். அந்தச் சாட்­சி­யத்தை உங்­களால் சவா­லுக்­குட்­ப­டுத்த முடியும்.

சஹ்ரான் அடிப்­ப­டை­வா­தி­யென 2016இல் நாம் அறிந்­து­கொண்­டி­ருந்தோம். சஹ்ரான் இறந்த போதே அவர் பயங்­க­ர­வா­தி­யென அறிந்து கொண்டேன். சிலர் இப்­போது சஹ்ரான் பற்றி கூறும் கதை­களைக் கேட்­கும்­போது எனக்கு சிரிப்பு வரு­கி­றது. சில பிக்­குகள் தமது சுய­ந­லத்­துக்­காக சஹ்­ரானின் பெயரைப் பாவித்­தார்கள். சஹ்ரான் கருப்பா? வெள்­ளையா என்று தெரி­யாத சிலர் இவ்­வாறு செயற்­பட்­டார்கள்.

ஆனால் அர­சாங்கம் பத­விக்கு வரு­வ­தற்கோ, அர­சாங்­கத்தை பத­வி­யி­லி­ருந்து நீக்­கு­வ­தற்கோ நான் சஹ்­ரானின் பெயரை பயன்­ப­டுத்­த­வில்லை.

3 தட­வைகள் சஹ்ரான் என்னைச் சந்­தித்­துள்ளார். அவ­ருடன் எடுத்­துக்­கொண்ட புகைப்­ப­டங்கள்  என்­னி­ட­முள்­ளன. நெல்­லி­க­லக்கு அருகில் சஹ்­ரா­னுக்கு மத்­திய நிலை­ய­மொன்­றினை அமைப்­ப­தற்கு காணி­யொன்று தேவைப்­பட்­டது. அவ்­வாறு மத்­திய நிலை­ய­மொன்­றினை அமைப்­ப­தற்கு நான் இட­ம­ளிக்­க­வில்லை.  முதலில் அவர் எம்­முடன் சுமு­க­மான கலந்­து­ரை­யா­டலில் ஈடு­பட்டார். இரண்­டா­வது தட­வையும் இவ்­வாறே பேசினார். மூன்­றா­வது தடவை என்­னுடன் தொலை­பே­சி­யூ­டாக உரை­யா­டினார்.

நான் சஹ்­ரா­னுடன் இவ்­வாறு உரை­யா­டி­ய­தற்­காக எனக்கு பின்பு கொலை அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டது. உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் நடை­பெற்று 10 நாட்­களின் பின்பும் எனக்கு கொலை அச்­சு­றுத்தல் கடி­த­மொன்று கிடைத்­தது. பொலிஸ் மா அதிபர், இரா­ணுவ தள­பதி மற்றும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வுக்கும் அக்­க­டி­தத்தின் பிர­தி­களை வழங்­கி­யுள்ளேன்.

சமு­தித, உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் சூத்­தி­ர­தா­ரி­க­ளையே கண்­டு­பி­டிக்­கா­த­வர்கள் எனது விவ­காரம் பற்றி தேடிப்­பார்ப்­பார்­களா?


உங்­க­ளுக்கு இன்னும் கொலை அச்­சு­றுத்தல் உள்­ளதா?

அது­பற்றி எனக்குத் தெரி­யாது. இன்னும் எனக்கு பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­பதி ஆணைக்­குழு மூலம் இரு பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் எனது பாது­காப்­புக்கு ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளார்கள்.


யாரெல்லாம் உங்­க­ளுக்கு எதி­ராக இருக்­கி­றார்கள்?

இந்­நாட்டில் இன­வாதம், மத வாதத்தை தூண்டி ஆட்­சிக்கு வரு­வ­தற்கு முயற்­சிப்­ப­வர்கள் எனக்கு எதி­ராக இருக்­கி­றார்கள். இந்­நாட்டின் சம்­பி­ர­தாய முஸ்­லிம்கள் மீது நான் மிகவும் அன்பு செலுத்­து­கிறேன். அடிப்­ப­டை­வா­தத்தை விதைக்கும், தேசி­யத்தை மதிக்­காத மக்கள் என்னை எதிர்க்­கி­றார்கள்.

அரே­பி­யாவில் இருந்து வந்த முஸ்லிம்கள் இலங்கைப் பெண்களை மணந்தார்கள். பிறந்த பிள்ளைகளுக்கு சிங்கள குடும்பப் பெயருடன் கூடிய பெயர்களை சூட்டினார்கள். சம்பிரதாய முஸ்லிம்களின் பெயர்கள் இவ்வாறே அமைந்துள்ளன. அந்தப் பிள்ளைகள் சிங்கள தாய்மார்களின் பாலை அருந்தியவர்கள். இந்த சம்பிரதாய முஸ்லிம்கள் மீது நான் அன்பு செலுத்துகிறேன். அவர்களுக்காக நான் என்றும் முன்நிற்பேன்.

முஸ்லிம் அடிப்படைவாதிகள் உள்ளனர். பதியுதீன்கள் இருக்கிறார்கள். விஷேடமாக அசாத்சாலி, ரியாஸ்சாலி  போன்றவர்கள். ரியாஸ் சாலி செலவுகள் செய்து என்னை எதிர்க்கிறார். இதற்கான ஆதாரங்கள் என்னிடமுள்ளன.

அடிப்படைவாத முஸ்லிம்கள் எனது முதன்­மை­யான எதி­ரிகள்.

 கூர­க­லக்­காக நான் அர­சி­யல்­வா­தி­க­ளி­டமோ, அர­சாங்­கத்­தி­டமோ எவ்­வித உத­வியும் பெற்­றுக்­கொள்­ள­வில்லை. பலாங்­கொ­டையைச் சேர்ந்த எம்.பி.யொருவர் வழங்­கிய 15 இலட்சம் ரூபாவை நான் நிரா­க­ரித்தேன்.

நான் நெல்லிகல பன்சலையைநிர்மாணித்தபோது ஹலீம் என்னும் பெயருடைய முஸ்லிம் எம்.பி யொருவர் 15 இலட்சம் பணம் தந்தார்.  நான் கடிதம் மூலம் அதனையும் நிராகரித்தேன். இன்னொரு அரசியல்வாதி 25 இலட்சம் தந்தார். அதனையும் கடிதம் மூலம் நிராகரித்தேன். அந்த மூன்று கடிதங்களும் என்னிடமுள்ளன என்றார்.-Vidivelli

No comments

Powered by Blogger.