சஜித் பிரேமதாச, பிரதமராக நியமிக்கப்படுவார் - ராஜித
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பதவி விலகிய பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பிரதமராக நியமிக்கப்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் சம்பிரதாயங்களுக்கு அமைய எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் மாற்று பிரதமர். இதனால், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைத்து மக்களின் பிரச்சினைகளை தீர்க்க எதிர்பார்த்துள்ளோம்.
நிலவும் நெருக்கடியான நிலைமையை நாடாளுமன்றத்தின் ஊடாகவே முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அதனை விடுத்து நாட்டில் அராஜக நிலைமை ஏற்பட்டால், இலங்கையானது ஆப்கானிஸ்தான், சூடான், துனிசியா போன்ற நாடுகளை போல் ஆகிவிடும் எனவும் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். TW
Post a Comment