Header Ads



நாட்டில் மீண்டும் மாஸ்க்..?


தற்போது பரவி வரும் புதிய வகையான வைரஸை கண்டுபிடிப்பதற்கு மிகவும் சிரமம் என்பதாலும், உயிருக்கு ஆபத்து என்பதாலும் மக்கள் அவசியம் முக கவசங்களை அணிய வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இது டெல்டா வைரஸை விட ஐந்து மடங்கு சக்தி வாய்ந்ததாகும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

மூட்டு வலி, தலைவலி, கழுத்து வலி, முதுகின் மேல் பகுதியில் வலி, நிமோனியா என்பன இதன் அறிகுறிகளாகும். குறுகிய காலத்திற்குள் இந்த நோயின் தாக்கம் தீவிரமடையும் என அந்த வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயத்தில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும், மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள இடங்களை தவிர்க்குமாறும், முகக் கவசங்களை அணிந்து அடிக்கடி கைகளை கழுவிக் கொள்ளுமாறும் அவர் தெரிவித்தார்

2

நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் காரணமாக முகக்கவசம் அணிவதை காட்டாயமாக்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (25) சுகாதார அமைச்சில் நடைபெறவுள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் தொற்றாநோய் நிபுணர்களின் பங்குபற்றலுடன் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

புதிய கொவிட் ஒமிக்ரோன் வைரஸ் காரணமாக, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் சுகாதார வல்லுநர்கள் சங்கம் ஆகியவை முகக்கவசங்களை மீண்டும் கட்டாயமாக்குமாறு சுகாதார அமைச்சிடம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.