ரணிலின் நேரடி உத்தரவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அராஜகம், சவேந்திர சில்வா தடுத்தும் வஞ்சம் தீர்த்தார்
வெற்றிகரமான படை நடவடிக்கைகளினால் ஜனாதிபதி செயலகம் முற்றாக படையினரின் வசம் வந்துள்ளதாகவும் அதற்கான போக்குவரத்து தடை நீங்கியுள்ளதாகவும் பொலிஸ் அறிவித்திருக்கிறது.
காலிமுகத்திடல் போராட்டக்காரர்களை அடித்து விரட்ட நேரடி உத்தரவு ரணிலிடம் இருந்தே படைத்தரப்புக்கு சென்றுள்ளதாக தகவல்...
‘ஆயுதம் தாங்கிய படையினர் செல்லவேண்டும், இன்றைய அமைச்சரவை பதவியேற்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவேண்டும் அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்’ என்று ரணில் நேரடியாக கூறியுள்ளார். ஆனால் துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை..
இன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் போகவிருக்கிறார்கள் என்பதால் அடக்குமுறையில் அவர்கள் அனுப்பப்படக் கூடாதென ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறியதாகவும் ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் தெரிகிறது.
அடக்குமுறை, பாதுகாப்புப் படைகளின் பிரயோகம்தான் தீர்வு என்று நம்பும் ஜூனியர் ஜே. ஆர் ரணில், இதற்காகத்தான் நேற்றுமுன்தினம் படையினரை நேரடியாகவே சந்தித்து, ‘நான் உங்களுடன் இருக்கிறேன்’ என்று தைரியம் கொடுத்திருந்தார்..
மீடியா என்று கூறியும் அடி , வெளிநாட்டு செய்தியாளர்களுக்கு உதை , சிவிலியன்கள் மீது மிதி என்று இன்று அதிகாலைமுதல் வெள்ளிக்கிழமை சம்பவத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார் ரணில்...
பார்லிமென்ட்டில் இப்போது வாக்கெடுப்பொன்றினை நடத்தினால், மூன்றிலிரண்டு பெரும்பான்மையை விட கூடுதலான வாக்குகள் கிடைக்கும் என்ற தைரியத்திலும் , ஜனாதிபதியாகிவிட்ட இறுமாப்பிலும் , தனது வீட்டை எரித்தமைக்கான வஞ்சத்தை தீர்த்திருக்கிறார் விக்கிரமசிங்க..
போராட்டக்காரர்களை அடித்துத் துவைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கோட்டா நாட்டில் இருந்து ஓடியமையும் , இந்த நிலைமைகளை பார்த்து பிரதமர் பதவியில் இருந்து ஓடுவாரென எதிர்பார்க்கப்பட்ட ரணில் போராட்டக்காரர்களை தாக்கி அகற்றியிருப்பதுவும் விசித்திரம்..
ரணில் இன்று பிடுங்கியது தேவையில்லாத ஆணி...
இனியும் பிடுங்கவே போகிறார்..
இனி ஊடகங்கள் மீதான கட்டுப்பாடு வரும்...
ஆனால் நீங்கள் என்ன செய்தாலும், உங்கள் அராஜகங்களை சுட்டிக்காட்டி சம்பவம் பண்ணுவோம் மிஸ்டர் ப்ரெசிடெண்ட்...
Siva Ramasamy
Post a Comment