மெத்யூஸுக்கு கொரோனா
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஏஞ்சலோ மெத்யூஸுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ரெப்பிட் அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி வருவதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் கூறியுள்ளது.
காலியில் இடம்பெற்றுவரும் அவுஸ்திரேலிய – இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடியிலுந்தார்.
நேற்று முன்தினம் இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்ஸுக்காக துடுப்பாடியபோது, ஏஞ்சலோ மெத்யூஸும் அணியில் இடம்பெற்றிருந்தார்
இந்தநிலையில், தற்போது அவருக்கு பதிலாக ஓஷத பெர்னாண்டோ அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
Post a Comment