Header Ads



இலங்கையர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு


இலங்கைத் தொழிலாளர்களுக்கு விவசாயத் துறையில் பணிபுரிய ஜப்பான் அரசாங்கத்தினால் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட திறன்களுடன் கூடிய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஜப்பான் இலங்கைக்கு வழங்கிய தாதிய சேவைகள் மற்றும் உணவு பானங்கள் சேவைகளுக்கு மேலதிகமாக விவசாயத் துறையிலும் தொழில் வாய்ப்புகளை வழங்க ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

விவசாயத் துறையில் உள்ள தொழில்வாய்ப்புகளுக்கு ஜப்பானிய மொழித் தேர்ச்சியுடன் கூடுதலாக தொழில்முறை தகுதிகள் அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 17 வயதுக்கு மேற்பட்ட தகுதியுள்ள அனைவரும் விண்ணப்பிக்க முடியும் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் 29ஆம் திகதி முதல் ஓகஸ்ட், செப்டம்பர், ஒக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய மாதங்களில் தகுதிக்காண் பரிசோதனைகளுக்கான பரீட்சைகள் இணையம் ஊடாக இடம்பெறவுள்ளன.

இதற்கான தகவல்களை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக இணையத்தளத்தின் http://www.slbfe.lk/ ஜப்பான் தொழில் வாய்ப்புகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பக்கத்திற்கு சென்று பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.