அநுரகுமாரவிடம் ரணில் கேட்ட துப்பாக்கிகள், தியவன்னாவ பாலத்துக்கு கீழிருந்து மீட்பு
பொல்துவ சந்தியில், ஜூலை 13 ஆம் திகதியன்று நடைபெற்ற போராட்டத்தின் போது, படையினரிடம் இருந்து அபகரிக்கப்பட்ட டி-56 ரபில், வெற்று மெகஷின் ஆகியன, தியவன்னாவ பாலத்துக்கு கீழிருந்து, இலங்கை கடற்படை சுழியோடிகளால் மீட்கப்பட்டுள்ளன.
2
ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பு புதன்கிழமை இடம்பெற்றது, அன்றைய 20-07-2022 தினம் பாராளுமன்றத்திற்குள் செல்லகையில் மக்கள் விடுதலை முன்னணியின் அநுகுமார திசாநாயக்க எதிரே வந்துள்ளார்.
' இரண்டு துப்பாக்கிகளும் எங்கே ' என ஜனாதிபதி ரணில் கேட்டுள்ளார்.
எந்த துப்பாக்கிகள் என இதன்போது அநுர வினா எழுப்ப,
பாராளுமன்ற ஆர்ப்பாட்டத்தின் போது, இராணுவத்திடமிருந்து களவாடி சென்றீர்களே, அந்த துப்பாக்கிகளை தான் கேட்கிறேன் என ஜனாதிபதி ரணில் குறிப்பிடவே,
கேலி செய்யாது எடுத்துச் சென்றவர்களிடம் கேளுங்கள் என அநுர கூறியுள்ளார் .
பரவாயில்லை கூடிய விரைவில் இராணுவத்திடம் ஒப்படைத்து விடுங்கள் என கூறியவாறு ஜனாதிபதி ரணில் அங்கிருந்து சென்றுள்ளார்.
Post a Comment