புட்டினிடம் கடன் கேட்டார் கோட்டாபய
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசியில் உரையாடலொன்றை மேற்கொண்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த உரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக ஜனாதிபதி டுவிட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.
கடந்த கால சவால்களை சமாளிக்க ரஷ்ய அரசாங்கம் வழங்கிய அனைத்து ஆதரவிற்கும் நன்றி தெரிவித்த அதேவேளை, தற்போதைய பொருளாதார சவால்களை தோற்கடிப்பதற்காக இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய கடன் ஆதரவை கோரியதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கைக்கு ஏரோஃப்ளொட் விமான சேவையை மீண்டும் தொடங்குமாறு வேண்டுகோள் விடுத்ததாகவும் இந்த உரையாடலின் போது, சுற்றுலா, வர்த்தகம் மற்றும் கலாசாரம் போன்ற துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது அவசியம் என ஏகமனதாக ஏற்றுக்கொண்டதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
Post a Comment