ஜனாதிபதி ரணிலுக்கு, வீரவங்ச எழுதியுள்ள கடிதம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள நாட்டின் தற்போதைய பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடியை தீர்ப்பதற்கான குறைந்தபட்ச பொது தேசிய வேலைத்திட்டத்தை உருவாக்கும் பரிந்துரைகள் அடங்கிய கடிதத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டில் நிலவும் பொருளாதார, அரசியல் நெருக்கடிகளை பயன்படுத்தி இலங்கை அரசை வீழ்த்த முன்னெடுக்கப்பட்டுள்ள அனர்த்தமான ஏகாதிபத்திய நடவடிக்கைகளுக்கு பலியாகாமல் இருக்க வேண்டும்.
எவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தற்போது நீங்கள் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி இரண்டரை ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளீர்கள்.
எமது அரசியல் வாசிப்புக்கு அமைய நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இரண்டு மாற்று வழிகளில் ஒன்றை மட்டுமே தெரிவு செய்ய நேரிட்டுள்ளது.
முதலாவது அதிகரித்து வரும் பொருளாதார அரசியல் நெருக்கடிகளை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் அனர்த்தமான ஏகாதிபத்திய நடவடிக்கைகளில் இரையாகி இலங்கையை ஹெய்டி போன்ற நாடாக மாற்றுவது.
அதன் மூலம் இலங்கையின் வரலாறு முடிவுக்கு வரும் என்பதுடன் உங்களது அரசியல் இருப்பும் ஆபத்துக்கு உள்ளாகும்.
இரண்டாவது இறுதி நேரத்திலாவது வரலாற்று தவறை திருத்திக்கொள்ள கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பிரயோசனப்படுத்தி நெருக்கடியை தீர்ப்பதற்காக சமூக உடன்படிக்கையை ஒன்றை ஏற்படுத்திக்கொள்வது தூரநோக்கான செயல்.
நீங்கள் நேர்மையாக இரண்டாவது வழிமுறையை தெரிவு செய்யும் நிலைமையில், குறுகிய அரசியல் வாதவிவாதகள் இன்றி, வரலாற்று மோதல்களை புதுப்பித்து கொள்ளாது அதற்கு வழிக்காட்ட நாங்கள் முன்வருவோம்.
இது நாட்டின் தேசிய சக்திகளுக்கு வரலாறு வழங்கியுள்ள பொறுப்பாக நாங்கள் கருதுகிறோம் எனவும் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
Post a Comment