நாட்டுக்காக பொறுப்புக்களை ஏற்க தயார், திருடர்களை பாதுகாக்கும் அமைச்சை ஏற்கமாட்டேன் - டட்லி
தற்போதைய நிலையில், நாட்டுக்காக பொறுப்புக்களை ஏற்க தயார் என அரிசி வர்த்தகரான டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் தெரிவித்தார்.
எனினும், திருடர்களை பாதுகாக்கும் அமைச்சை ஏற்க தயாரில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டை மீட்டெடுப்பதற்காக எந்தவொரு சவாலையும் ஏற்க தயார். நாட்டை மீட்டெடுக்க முயற்சிக்கும் குழுவினருடனேயே அந்த செயற்பாட்டை முன்னெடுக்க முடியும் என டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார். TL
Post a Comment