அமெரிக்காவில் இலங்கை முஸ்லிம்களின் ஹஜ்ஜுப் பெருநாள்
அமெரிக்கா - நியூ ஜேர்ஸியில் இலங்கை முஸ்லிம்களின், ஹஜ்ஜுப் பெருநாள் நிகழ்வுகள் சனிக்கிழமை, 9 ஆம் திகதி அங்குள்ள பள்ளிவாசலில் நடைபெற்றது.
இலங்கை முஸ்லிம்களுக்குரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற, ஹஜ் பெருநாள் நிகழ்வில் பெருநாள் தொழுகையையும், குத்பாவையும் இலங்கையில் இருந்து சென்றிருந்து ஜம்மியத்துல் உலமாவின் பிரதித் தலைவர்களில் ஒருவரும், மூத்த உலமாவும் ஆகிய அப்துல் ஹாலிக் (தேவபந்த்) நிகழ்த்தியுள்ளார்.
அவரது குத்பா உரையின் சுருக்கமாக, உழ்கியாவின் அவசியம், இப்றாஹீம் நபியின் தியாகங்கள உள்ளிட்டவற்றை ஞாபகப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.
குறித்த ஹஜ் பெருநாள் நிகழ்வுகளில் நியூ ஜேர்ஸி மாகாணத்தில் வாழும், இலங்கை முஸ்லிம்கள் கலந்து கொண்டுள்ளனர்.
Post a Comment