Header Ads



பாவமன்னிப்பு - இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்)


புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞரும் இஸ்லாமிய சட்டத்துறை வல்லுனருமான இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் முதிர்ந்த வயதான காலத்தில் ஒரு ஊரினூடாக பயணம்  செய்து கொண்டிருந்தார். இரவானதும் இரவுத்தொழுகையை தொழுதுவிட்டு அதே பள்ளிவாசலில் இரவை கழிக்கவும் காலையில் எழுந்து பயணத்தை தொடரவும் விரும்பினார். தனது விருப்பத்தை பள்ளிவாசலின் பராமரிப்பாளரிடம் கூறினார். ஆனால் அம்மனிதர் அதற்கு இணங்கவில்லை. பள்ளிவாசலுக்கு வெளியே தங்கலாம் என முடிவுசெய்தார். அதற்கும் அனுமதிக்காமல் வெளியே போய் தங்குமாறு கூறி வெளியே அனுப்பிவிட்டார். அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்), தன் பணிவு காரணமாக, தன்னை அங்கிருந்த பராமரிப்பாளரிடமோ வேறு யாரிடமுமோ அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை.

பள்ளிவாசலுக்கு பக்கத்தில் ஒரு ‘பேக்கரி’ இருந்தது. அதில் இருந்த அதன் உரிமையாளர் நடந்த சம்பவத்தை அவதானித்துக்கொண்டிருந்தார்.  இமாம் அஹ்மத் மீது இரக்கம் கொண்டார். இரவு தன்னுடன் தங்கும்படி இமாமை அழைத்தார்.

‘பேக்கர்’ மாவை பிசைவதையும், நெருப்பைப் பற்ற வைப்பதையும், அடுப்பிலிருந்து சூடான நெருப்புத்தனலை சரிசெய்வதையும் அதேவேளையில் அல்லாஹ்வை நிணைவு கூருபவராகவும் பாவமன்னிப்பு கோருபவராகவும் இருப்பதை இமாம் அவர்கள் அவதானித்துக்கொண்டிருந்தார்.

காலையில் இமாம் அவர்கள் ‘பேகரை’ அனுகி அவர் எல்லா நேரங்களிலும் வழக்கமாக்கிக்கொண்டுள்ள இறைவனை துதிப்பதையும் பாவமன்னிப்பு கோருவதைப்பற்றியும் வினவினார். அதற்கு அம்மனிதர் தனக்கு இரண்டவது இயல்பாக அது மாறிவிட்டதாகக்கூறினார். இதனைக்கேட்ட இமாம் அஹ்மத் அவர்கள் அம்மனிதரைப்பார்த்து இப்பழக்கத்தினால் ஏதேனும் பலன் கிடைத்துள்ளதா எனக்கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், ‘பேக்கர்’;

“அல்லாஹ்வின் மீது ஆணையாக, எனது எல்லா பிராத்தனைகளும் அங்கிகரிக்கப்பட்டுள்ளன, ஒன்றைத்தவிர” என்றார்.

இதுவரை ஏற்றுக்கொள்ளப்படாத பிராத்தனை என்ன என இமாம் அவர்கள் ‘பேக்கர்’ இடம் கேட்டார்கள். அதற்கு அம்மனிதர் ;

“புகழ்பூத்த இமாம் அஹமத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்களை காணவேண்டும்” என்றார்கள். 

இதனைக்கேட்டவுடன் இமாம் அவர்களின் கண்களில் இருந்து ஆனந்தக்கண்ணீர் கசிந்தது.உடனே அம்மனிதரைப்பார்த்து;

“இதோ நான் தான் இமாம் அஹமத் இப்னு ஹன்பல்” என்றார்கள்.

“நிச்சயமாக அல்லாஹ், உங்களது விருப்பம் நிறைவேறுவதற்காகவே என்னை இங்கு உங்களின் இடத்திற்கு கொண்டு வந்துள்ளான்” என்றார்கள்.

இக்கதை அடிக்கடி பாவமன்னிப்பு கோருவதின் சக்தியை நினைவூட்டுகின்றது. இமாம் குர்துபி (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்;

அல் ஹசன் அல் பஸரி (ரஹ்) அவர்களிடம் ஒருமனிதன் வரட்சியைப்பற்றி முறையிட்டார்.அதற்கு அவர் அவரிடம் “அல்லாஹ்விடம் மன்னிப்புக்காக பிரார்த்தனை செய்யுங்கள்." என்றார்.

இன்னொரு மனிதர்  அல் ஹசன் அல் பஸரி (ரஹ்) இடம் அவரின் ஏழ்மை நிலைபற்றி முறையிட்டார்.அதற்கும் அவர்;

“உங்களை மன்னிக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்."  என்றார்.

இன்னொரு மனிதர் அவரிடம் “ ஒரு குழந்தையை தருவதன் மூலம் எனக்கு அருள்புரியுமாறு அல்லாஹ்விடம் பிராத்தியுங்கள்” என்றார்.இதனைக்கேட்ட அல் ஹசன் அல் பஸரி (ரஹ்) அவர்கள்;

“தொழுது அல்லாஹ்விடம் மன்னிப்புக்கோருங்கள்” என்றார்.

இன்னொரு மனிதர் அவரிடம்;

“எனது தோட்டம் வரண்டிருக்கின்றது. எனக்காக பிராத்தியுங்கள்” என்றார்.இதற்கும் அல் ஹசன் அல் பஸரி (ரஹ்) அவர்கள் “ அல்லாஹ்வை தொழுது பாவமன்ன்னிப்பு கோருங்கள்” என்றார்.

ஹசன் பஸரி (ரஹ்) அவர்களின் பதில்களைப்பற்றி வினவினார்கள்.அதற்கு அவர்கள்;

“இது எனது சொந்தக்கருத்து அல்ல. அல்லாஹ் சூறா நூஹ்’ இல் பின்வருமாறு கூறுகின்றான்;

[ மேலும், “நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்” என்றுங் கூறினேன். (அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான். “அன்றியும் அவன் உங்களுக்குப் பொருள்களையும், புதல்வர்களையும் கொண்டு உதவி செய்வான்; இன்னும், உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்; உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான்.]

 (அல்குர்ஆன் : 71:10,11,12 ).

AKBAR  RAFEEK

No comments

Powered by Blogger.