Header Ads



ஜனாதிபதியின் விசேட அறிக்கை


எரிவாயு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள ஜனாதிபதி, எரிவாயு மற்றும் எரிபொருள் இருப்புக்கள் ஜூலை 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமைக்குள் இலங்கையை வந்தடையும் என்று தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியினரால் பரப்பப்படும் தவறான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என ஜனாதிபதி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளதுடன், அடுத்த சில வாரங்களுக்குள் நிதித் திட்டம் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெருக்கடியைச் சமாளிக்கவும் தீர்க்கவும் பல திட்டமிடல் மற்றும் கடின உழைப்புக்குப் பிறகு, முடிவுகள் இப்போது தெளிவாகத் தெரிகிறது, என்றார்.

நாட்டில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து 44,000 மெட்ரிக் டன் உரம் முதல் சரக்கு நாளை வர உள்ளது

ஜூலை 12 முதல் எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து விநியோக்கவும், உணவுப் பற்றாக்குறையைத் தடுக்க பல திட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட வரைவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.