Header Ads



பாராளுமன்றத்தை முற்றுகையிடுவதற்கு மக்களுக்கு உரிமை உள்ளது


தற்போது நிலவும் அரசியல் நெருக்கடி மற்றும் சமூக நெருக்கடி ஆகிய இரண்டையும் தீர்ப்பதற்கு பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்கு செல்வதே சரியான தீர்வாக இருக்கும். தற்போதைய அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு சமூகத்திற்கு வாய்ப்பளிப்பதே ஒரே வழி என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல்துறை உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீள வேண்டுமானால் முதலில் நாட்டின் அரசியலை ஸ்திரப்படுத்த வேண்டும். அரசியலை ஸ்திரப்படுத்த, சமூகத்தை ஸ்திரப்படுத்துவது அவசியம். சமூகம் ஸ்திரமாக இருக்க வேண்டுமானால் மக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செய்யாமல் அடக்குமுறை மூலம் சமூகத்தை ஸ்திரப்படுத்தவும், ஆட்சியாளர்களை பாதுகாக்கும் சர்வகட்சி அரசாங்கத்தின் ஊடாக அரசியலை ஸ்திரப்படுத்தவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வீண் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக லால் காந்த குற்றம் சுமத்தியுள்ளார். பாராளுமன்றத்தை கலைத்து மக்கள் கருத்து தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவது தான் இப்போது செய்ய வேண்டும். எனவே அதனை வற்புறுத்தி பாராளுமன்றத்தை முற்றுகையிடுவதற்கு மக்களுக்கு உரிமை உள்ளது எனவும் ஜே.வி.பி கே.டி. லால்காந்த மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

காவியன்

No comments

Powered by Blogger.