பொலிஸார் நட்டஈடு வழங்க வேண்டுமென பரிந்துரை
கோட்டாகோகமயில் கடந்த மே மாதம் 09 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு பொலிஸார் நட்ட ஈடு வழங்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அலரி மாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர், அறவழி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கோ அல்லது தடுப்பதற்கோ இயலாமல் போன பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் முதல், ஆர்ப்பாட்டக் களத்திற்கு அருகில் சேவையில் ஈடுபட்ட அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த பரிந்துரைகளை ஜனாதிபதியிடம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சமர்ப்பித்துள்ளது.
மே 09 ஆம் திகதி அறவழி போராட்டக்காரர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கவும், சட்டவாட்சியை பாதுகாக்கவும் பொலிஸ்மா அதிபருக்கு இயலாமல் போயுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளது.
Post a Comment