Header Ads



இன்று கறுப்பு தினம், ரணில் பதவியேற்று முதல் நாளிலே மக்களை அடக்க ஆயுதப்படையை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு


காலிமுகத்திடல் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தவர்கள் மீது படையினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை தாம் வன்மையாக கண்டிப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

படையினர் நேற்று இரவு காலிமுகத்திடல் ஆர்ப்பாட்ட களத்தை ஆக்கிரமத்தமை தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்க்பட்டுள்ளது.

மேலும், இன்றைய தினம் இலங்கைக்கு கறுப்பு தினமாகும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி பதவியேற்று முதல் நாளிலேயே சிவில் மக்களை அடக்குவதற்காக ஆயுதப்படையை பயன்படுத்துவது நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திர தன்மைக்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், படையினர் சிவில் மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்வது தொடர்பான வீடியோ ஆதரங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும், சட்டத்தரணிகள் மற்றும் ஊடகவியளாலர்கள் ஆகியோர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சட்டம் மற்றும் மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


2 comments:

  1. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்திற்கு எதிராக இலங்கையில் பாரிய போராட்டங்கள் தொடங்கிய 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இது செய்யப்பட வேண்டும். இந்த குண்டர்கள், போதைக்கு அடிமையானவர்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குண்டர்கள் மற்றும் ஜேவிபி/எப்எஸ்பி - முன்னணி சோசலிசக் கட்சி அரசியல்வாதிகளின் முட்டாள்தனத்தை நிறுத்த ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியாக இருக்கும் கோட்டாபய இந்த உத்தரவுகளை/அதிகாரங்களை காவல்துறை உள்ளிட்ட படைகளுக்கு வழங்கியிருக்க வேண்டும். லால்காந்த, குமார் குணரத்னம், ஐ.ம.சு.க அழைப்பாளர் வசந்த குமார முதலிகே மற்றும் முன்னாள் தலைவர் லஹிரு வீரசேகர போன்றவர்கள் "எதிர்ப்புக்கான சுதந்திரம்" என்ற போர்வையில் இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம், ஐ.நா. மற்றும் ஐ.என்.ஓ.க்கள் மற்றும் (திரைக்குப் பின்னால்) ஆதரவளித்து நிதியளித்தனர். இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வழங்கிய ஆதரவு), அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியில் இந்த குழப்பமான நிலைமைக்கு எமது "மாத பூமியை" தள்ளியது. "MOB நடத்தையின் சக்தியை" பயன்படுத்தியது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆயுதப்படை மற்றும் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட அதிகாரம் "இல்லை" நாட்டிற்கு "அமைதி" மற்றும் "இணக்கத்தை" கொண்டு வருவதற்கும், அரசியல் அதிகாரங்கள் மற்றும் ஜனநாயகத்துடன் இணைந்து செயல்படும் நமது "மாத்ருபூம்யா" வின் "பொருளாதாரத்தை" மீட்டெடுக்க உதவுவதற்கும் தேவையான "படையை" பயன்படுத்தத் தவறுவது. நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு இணங்க, மிக விரைவில் பொறுப்பேற்கக்கூடிய மோசமான நிறுவனங்கள் வரவிருக்கும் வாரங்கள்/மாதங்களில் தேசத்தால் பாராட்டப்படும்.
    BASL எவ்வாறு இந்த "அறகலகராயோக்கள்" என்று அழைக்கப்படுபவர்களுக்கு உதவியது மற்றும் ஆதரவளித்தது என்பதற்கான அடக்கமான செயற்பாடுகள், ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலுள்ள கோட்டா-கம என்று அழைக்கப்படும் செய்தியாளர் சந்திப்பில் சில முக்கிய ஆர்வலர்களால் விளக்கப்பட்டது. தேசிய தொலைக்காட்சி நிலையங்கள் இந்த செய்தியாளர் மாநாட்டை ஒளிபரப்பியது மற்றும் தேவை ஏற்பட்டால் CID அல்லது காவல்துறையால் சரிபார்க்கப்பட வேண்டும். இது BASL ஆல் "சட்டத்தின் விதி"க்கு அவமரியாதையாக இருந்தது. BASL அவர்களே குற்றத்தைச் செய்திருக்கும் போது, ​​ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அதே குற்றத்தின் "கைதிகள்" என்று அழைத்து "சட்டத்தின் ஆட்சியை மதிக்க வேண்டும்" என்று எப்படிக் கேட்க முடியும்?
    Noor Nizam - நூர் நிசாம் - சமாதானம் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர், அரசியல் தொடர்பாடல் ஆய்வாளர், SLFP/SLPP ஸ்டால்வர்ட், "முஸ்லிம் குரல்" அழைப்பாளர், தேசப்பற்றுள்ள குடிமகன்.

    ReplyDelete
  2. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்திற்கு எதிராக இலங்கையில் பாரிய போராட்டங்கள் தொடங்கிய 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இது செய்யப்பட வேண்டும். இந்த குண்டர்கள், போதைக்கு அடிமையானவர்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குண்டர்கள் மற்றும் ஜேவிபி/எப்எஸ்பி - முன்னணி சோசலிசக் கட்சி அரசியல்வாதிகளின் முட்டாள்தனத்தை நிறுத்த ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியாக இருக்கும் கோட்டாபய இந்த உத்தரவுகளை/அதிகாரங்களை காவல்துறை உள்ளிட்ட படைகளுக்கு வழங்கியிருக்க வேண்டும். லால்காந்த, குமார் குணரத்னம், ஐ.ம.சு.க அழைப்பாளர் வசந்த குமார முதலிகே மற்றும் முன்னாள் தலைவர் லஹிரு வீரசேகர போன்றவர்கள் "எதிர்ப்புக்கான சுதந்திரம்" என்ற போர்வையில் இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம், ஐ.நா. மற்றும் ஐ.என்.ஓ.க்கள் மற்றும் (திரைக்குப் பின்னால்) ஆதரவளித்து நிதியளித்தனர். இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வழங்கிய ஆதரவு), அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியில் இந்த குழப்பமான நிலைமைக்கு எமது "மாத பூமியை" தள்ளியது. "MOB நடத்தையின் சக்தியை" பயன்படுத்தியது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆயுதப்படை மற்றும் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட அதிகாரம் "இல்லை" நாட்டிற்கு "அமைதி" மற்றும் "இணக்கத்தை" கொண்டு வருவதற்கும், அரசியல் அதிகாரங்கள் மற்றும் ஜனநாயகத்துடன் இணைந்து செயல்படும் நமது "மாத்ருபூம்யா" வின் "பொருளாதாரத்தை" மீட்டெடுக்க உதவுவதற்கும் தேவையான "படையை" பயன்படுத்தத் தவறுவது. நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு இணங்க, மிக விரைவில் பொறுப்பேற்கக்கூடிய மோசமான நிறுவனங்கள் வரவிருக்கும் வாரங்கள்/மாதங்களில் தேசத்தால் பாராட்டப்படும்.
    BASL எவ்வாறு இந்த "அறகலகராயோக்கள்" என்று அழைக்கப்படுபவர்களுக்கு உதவியது மற்றும் ஆதரவளித்தது என்பதற்கான அடக்கமான செயற்பாடுகள், ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலுள்ள கோட்டா-கம என்று அழைக்கப்படும் செய்தியாளர் சந்திப்பில் சில முக்கிய ஆர்வலர்களால் விளக்கப்பட்டது. தேசிய தொலைக்காட்சி நிலையங்கள் இந்த செய்தியாளர் மாநாட்டை ஒளிபரப்பியது மற்றும் தேவை ஏற்பட்டால் CID அல்லது காவல்துறையால் சரிபார்க்கப்பட வேண்டும். இது BASL ஆல் "சட்டத்தின் விதி"க்கு அவமரியாதையாக இருந்தது. BASL அவர்களே குற்றத்தைச் செய்திருக்கும் போது, ​​ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அதே குற்றத்தின் "கைதிகள்" என்று அழைத்து "சட்டத்தின் ஆட்சியை மதிக்க வேண்டும்" என்று எப்படிக் கேட்க முடியும்?
    Noor Nizam - நூர் நிசாம் - சமாதானம் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர், அரசியல் தொடர்பாடல் ஆய்வாளர், SLFP/SLPP ஸ்டால்வர்ட், "முஸ்லிம் குரல்" அழைப்பாளர், தேசப்பற்றுள்ள குடிமகன்.

    ReplyDelete

Powered by Blogger.