Header Ads



மரணப் படுக்கையில் உலகப் புக‌ழ்பெ‌ற்ற நாத்திகர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா..?


- தமிழாக்கம் / imran farook -

உலகப் புக‌ழ்பெ‌ற்ற நாத்திகர்கள் மரணப் படுக்கையில் என்ன சொன்னார்கள் தெரியுமா:

👉 வால்டேர் என்பவர் புகழ்பெற்ற பிரெஞ்சு நாத்திக எழுத்தாளர். பிரெஞ்சு புரட்சிக்காக பெரும் பங்காற்றியவர், மதம் வேறு, அரசியல் வேறு என்ற கருத்தில் உறுதியாக நின்றவர். 

மரணப் படுக்கையில் தனது மருத்துவரிடம் கூறியதாவது: 

'ஆண்டவனும் என்னை கைவிட்டுவிட்டான். மக்களும் என்னை புறக்கணித்து விட்டனர். ஆறு மாதங்களுக்கு என் உயிரை தக்க வைத்து தாருங்கள்! என் பாதி சொத்தை தருகிறேன். நான் இறக்கப்போகிறேன், நான் நரகத்தை கண் முன் காண்கிறேன்'

👉 ஆங்கிலேய நாத்திகர் சர் தாமஸ் மரணப்படுக்கையில் கூறியதாவது: 

'இவ்வளவு காலமாக நான் கடவுளை நம்பவில்லை, நரகத்தையும் நம்பவில்லை. ஆனால் இப்போது நான் கடவுள் இருப்பதாக உணர்கிறேன், இப்போது நான் நரகத்தின் விளிம்பில் இருப்தாக உணர்கிறேன்.'

👉 சார்ச் ஆஃப் என்பவர் "சாத்தானின் பைபிள்" என்ற நூலின் ஆசிரியர். அவர் மரணப்படுக்கையில் கூறியதாவது:

'நான் மகா பாதக செயலை செய்துவிட்டேன். ஆண்டவன் என்னை மன்னிக்காவிட்டால் நான்  நாசமானவர்களில் ஒருவன் என்பதில் ஐயமில்லை'.

👉 பிரான்சு மன்னர் ஏழாம் சார்லஸ், பல்லாயிரக்கணக்கானவர்களை கொன்று குவித்தவர். தனது மரணப்படுக்கையில் கூறியதாவது: 

'நான் கொன்றவர்கள் என் கண் முன்னால் வந்து செல்கின்றனர். என் கெட்ட முடிவை நான் காண்கிறேன்'.

👉 தத்துவஞானி தாமஸ், இறக்கும் தருணத்தில் கூறியதாவது: 

'நான் இருண்ட பாதளத்தில் குதிக்கப் போகிறேன், இந்த நேரத்தில் இந்த உலகம் என் கைவசம் இருந்தால், ஒரு நாள் மாத்திரம் உயிர் வாழ அதை கொடுப்பேன்'.

👉 நாத்திக எழுத்தாளர் மாஸ் பெய்ன் கூறும்போது: 

'எனக்கு இந்த உலகமும் அது போன்றதும் இருந்தால், நான் அதை கொடுத்து இந்த வேதனையில் இருந்து தப்பிப்பேன். என்னை தனியே விடாதீர்கள்! நான் நரக  விளிம்பில் இருக்கிறேன். சைத்தானின் நண்பனாக நான் இருந்தேன்'.

👉 பிரபல இஸ்கட்லாந்து நாத்திகரும் வரலாற்றாசிரியருமான டேவிட் ஹியூம் இறப்பதற்கு முன் கூறியதாவது: 

'என்னை காப்பற்றுங்கள்! நரக நெருப்பு என்னை சுடுகிறது.' 

அவரை பார்த்தவர்கள் அவர் மிகவும் பரிதாபப்படும் நிலையில் இருந்ததாக கூறியுள்ளனர்.

👉 பிரெஞ்சு பேரரசர் நெப்போலியன் போனபார்டே உலகை ஆளும் வெறியில் மில்லியன் கணக்கானவர்களைக் கொன்றார். மரணபடுக்கையில் அவர் கூறியதாவது:

'என் நேரம் வர முன்பே நான் சாகப்போகிறேன். மண்ணோடு மண்ணாகப் போகிறேன். நான்தான் மிகப்பெரிய பேரரசரன், நான் விழும் நரக பாதளத்துக்கும்  சொர்க்க சோலைகளுக்கும் பெரும் தூரம் உள்ளது'.

👉 இருபதாம் நூற்றாண்டின் கொடுங்கோலன் ஸ்டாலினின் மகள் ஸ்வெட்லானா அவனின் மரணம் பற்றி வர்ணிக்கும் போது:

'என் தந்தையின் மரணம் ஒரு பயங்கரமாக இருந்தது. அவர் திடீரென்று கண்களைத் திறந்து பார்ப்பார், வெறித்தனமாக கோபமடைவார், மேலே பார்ப்பார், தனது இடது கையால் மேலே ஏதோ ஒன்று இருப்பதாக சைகை செய்வார். ஏதோ ஒன்று இருப்பதாக எச்சரித்துவிட்டு மரணித்தார்'.

👉 புஷ், தந்தை மகன் என ட்ரம்ப், புடின், மற்றும் அரேபிய கொடுங்கோலர்கள், அப்பாவி மக்களின் இரத்தத்தை ஓட்டியவர்கள் தங்களது மரணப்படுக்கையில் என்னெவெல்லாம் உளறப் போகிறார்கள் என்பதை வரலாறு பதிந்து வைக்கத்தான் போகிறது!

👉 வான்மறை  வசனம் ஒன்று இப்படிச் சொல்கிறது:

((யார் வழிகேட்டில் இருக்கிறார்களோ அவர்கள் வாக்களிக்கப்பட்ட (இவ்வுலக) வேதனையை (காணும் வரை) அல்லது மறுமையை காணும்வரை பேரருளாலன் (அர்ரஹ்மான்) அவர்களுக்கு அவகாசம் கொடுக்கிறான்;

(அவ்வாறு காணும் போது) எவருடைய தங்குமிடம் கெட்டது; எவருடைய படை பட்டாளம் பலஹீனமானது என்பதை திட்டமாக அவர்கள் அறிந்து கொள்வார்கள்” 

என்று (நபியே!) நீர் கூறுவீராக.))

📖 அல்குர்ஆன் : 19:75

No comments

Powered by Blogger.