Header Ads



குடிமக்களை ஒடுக்காதீர்கள் - ரணிலிடம் நேரடியாக கூறினார் அமெரிக்கத் தூதுவர்


 இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இன்று அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.

இது தொடர்பில் , ஒரே இரவில் ஆர்ப்பாட்க்காரர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த எனது ஆழ்ந்த கவலையை தெரிவிக்க அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்ததாக அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும், சிறந்த எதிர்காலத்திற்கான இலங்கையர்களின் அழைப்புகளுக்கு பதிலளிக்க, அதிபர் மற்றும் அமைச்சரவைக்கு ஒரு வாய்ப்பும் கடமையும் உள்ளது.

குடிமக்களை ஒடுக்குவதற்கான நேரம் அல்ல, மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும், பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பவும் அரசாங்கம் எடுக்கக்கூடிய உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எதிர்நோக்க வேண்டுமென அமெரிக்க தூதுவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. குறுகிய நோக்கமும், சர்வதேச சட்டங்கள் பற்றிய சரியான புரிந்துணர்வும் அற்ற இந்த சனாதிபதியும் அவருடைய பக்காடை மந்தி(ரி)களுக்கும் இந்த அமெரிக்க தூதுவரின் அவசர சந்திப்பின் பாரதூரம் நிச்சியம் விளங்காது. தூதராண்மைத்துவத்தின் (Diplomacy) அதி உச்ச நடவடிக்கை தான் ஒரு தூதுவர் அதுவும் அமெரிக்க தூதுவர் சனாதிபதியைச் சந்திப்பது நிச்சியம் அமெரிக்க அரசாங்க உயர் அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில் தான். இது நேரடியான அமெரிக்க தலையீட்டின் முக்கிய கட்டம். சுருங்கக்கூறின் அமெரிக்க தேவையற்ற தலையீட்டை இலங்கைக்கு வரவழைப்பது சனாதிபதியும் அரசாங்கமும்தான் என்பது இதன் மூலம் தௌிவாகின்றது. அப்படியானால் அமெரிக்க திட்டங்களை அமல்நடத்துவதற்கா ரணில் சனாதிபதியாக பதவியேற்றார். நாட்டில் தற்போது நிலவும் அடிப்படை நெருக்கடிகளுக்குத் தீர்வு கண்டு பொது மக்களின் அன்றாட வாழ்வை உடனடியாகச் சீரமைப்பது தான் இந்த நாட்டின் பொதுமக்கள் இந்த சனாதிபதியிடம் எதிர்பார்த்தது. பொஹொட்டுவ கட்சியியைத் தோற்றுவித்தவர்களின் தேவைகளை நிறைவேற்ற வந்த இந்த சனாதிபதி முதலில் அமெரிக்காவைத் தேவையற்ற வகையில் தலையீடு செய்ய ஊக்குவித்ததன் நோக்கம் என்ன என்பது தான் பொதுமக்களின் தற்போதைய பிரச்சினை.மூன்று மாதங்களில் இந்த நாட்டு மக்களின் பிரச்சினைகளை முற்றாகத் தீர்க்க வந்த சனாதிபதி பதவியேற்று 24 மணி நேரங்கள் முடிவடைய முன்பு சனநாயக ரீதியில் மனித உரிமைகளுக்கு உற்பட்டு இயங்கிய ஆர்ப்பாட்டக்காரர்களை அடித்து நொருக்கி காயப்படுத்தி அரசாங்கம் செய்ய ரணில் முயற்சி செய்தால் வரும் விளைவு இந்த நாட்டு மக்களுக்கு நிச்சியம் மிகவும் பாரதூரமாகத்தான் அமையும்.ஏற்கனவே பெற்றோல் வரிசையிலும் கேஸ் வரிசையிலும் மாண்டு மடியும் மக்களைக் கண்டு கொள்ளாமல் செய்த இந்த அநியாயத்தை உலக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பது கூட புரியாத நபர் தானா இந்த சனாதிபதி.இவருடைய ஆட்சி நிச்சியம் நீடிக்காது என்பது அவருடைய செயலாலே காட்டிவிட்டார். இதன் விளைவு அமெரிக்காவின் தலையீடு நிச்சியம் இந்த நாட்டு மக்களுக்கும் நாட்டுக்கும் மிகவும் பெரிய ஆபத்தை கொண்டுவரும் என பொதுமக்கள் அங்கலாய்க்கின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.