"பொய் கூறி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய, இன்று நாட்டைச் சீரழித்துவிட்டார்"
"பொய் கூறி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இன்று நாட்டைச் சீரழித்துவிட்டார்" என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று -01- நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,"தேசிய பாதுகாப்புக்கே முன்னுரிமை என அறிவிப்பு விடுத்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது அந்த உறுதிமொழியை மீறிவிட்டார்.
எனது ஆட்சியின்போது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது எனச் சுட்டிக்காட்டினர். தாங்கள் ஆட்சிப்பீடமேறினால் தேசிய பாதுகாப்புக்கே முன்னுரிமை எனவும் அறிவிப்பு விடுத்தனர். ஆனால், இன்று என்ன நடக்கின்றது?
தற்போதைய அரசு சர்வகட்சி அரசு கிடையாது. அதன் மூலம் சர்வதேச ஆதரவைப் பெற முடியாது" என கூறியுள்ளார். TW
Post a Comment