இலங்கை நெருக்கடிகளில் இருந்து மீள, நீண்டகால திட்டங்கள் அவசியமாகும் - குவைட்
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடியிலிருந்து மீண்டுவர, நீண்டகால திட்டங்கள் அவசியமாகும் என இலங்கைக்கான குவைட் தூதுவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான திட்டங்களை மேற்கொண்டால், தாம் இலங்கைக்கு ஆதரவு வழங்குவதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாத்தறை – வெலிகமை பகுதியில் நேற்று (30) பாடசாலைக் கட்டிடமொன்றை திறந்துவைத்து உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் எரிபொருள் நெருக்கடிக்கு ஒரு சில மாதங்களுக்குள் சாதகமான தீர்வுகளை பெற முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், இலங்கை மற்றும் குவைட் ஆகிய நாடுகளுக்கு இடையில், நீண்டகால உடன்படிக்கைகளை மேற்கொள்வதின் ஊடாக, இரு தரப்புக்கும் சிறந்த பலன்களை அனுபவிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்
Post a Comment