அடுத்த தேர்தலில் மிகப்பெரும், வெற்றியை எம்மால் பெறமுடியும் - பசில்
இனி வரும் காலங்களில் மிகப் பெரிய வெற்றியை எம்மால் பெற முடியும் என முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கும்போதே அவர் தனைகக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினால் மிகப் பெரிய வெற்றியைப் பெற முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மாவட்ட அளவில் கட்சி அமைப்பாளர்களை மாவட்ட கட்சி தலைமை அலுவலகத்துக்கு வரவழைத்து கட்சி சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
இந்த நிலையில், அடுத்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் பெப்ரவரிக்கு முன்னர் நடத்த வேண்டும் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதில் பெரும் வெற்றியை பெற்றுக்கொள்ள அதற்கான முன் ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment