Header Ads



இறுதி போரில் இறங்குகிறேன் - ஓகஸ்ட் 9 க்கு பின்னர், தினேஷ் குணவர்தன நாட்டின் ஜனாதிபதி ஆகலாம்


ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி ஊழல் ஆட்சியாளர்களை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான இறுதிப் போரில் தானும் தனது கட்சியும் இணையவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்

அத்துடன், ஓகஸ்ட் 9 ஆம் திகதிக்கு பின்னர் தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன இந்த நாட்டின் அதிபராக பதவியேற்க நேரிடலாம் எனவும் அவர் ஹெரிவித்தார்.

இன்று -27 நாடாளுமன்றில் இடம்பெற்ற அவசரகால விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர், " ஊழல் அரசியல்வாதிகளை பாதுகாக்க வேண்டாம். போராட்டக்காரர்கள் நாட்டுக்காக போராடினார்கள். அவர்கள் எங்களின் உறவினர்கள்.

எனவே அவர்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டாம். இவ்வாறான தாக்குதல்கள் மூலம் இலங்கை இராணுவத்துக்கு கிடைத்த பெருமையை பழுதாக்க வேண்டாம்.

இதேவேளை, போராட்டவாதிகள் மத்தியில் பல்வேறு கொள்கைகள் இருக்கின்றபோதும், ஒரே கொள்கைக்காக ஒன்றிணைய வேண்டும்.

ஓருவரை இருவரை அகற்றியதன் மூலம் தூய்மையான அரசியலை ஏற்படுத்தமுடியாது. எனவே எதிர்வரும் 9ஆம் திகதியன்று கொழும்பில் ஒன்றுக்கூடி ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்.

இந்தநிலையில் போராட்டவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டாம் என நான் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.