ஜூலை மாதத்தில் உணவுப் பொருட்களின் விலை 90.9% அதிகரிப்பு
ஜூலை மாதத்தில் உணவுப் பொருட்களின் விலை 90.9 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டிக்கு அமைய, தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் கணிப்பீட்டின் படி இந்த மாதம் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிப்பு அதாவது பண வீக்கம் 60.8 தசம் எட்டு வீதமாக அமைந்துள்ளது.
இதனால் உணவுப் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன.
உணவுப் பொருட்கள் அல்லாத எரிபொருள் விலை அதிகரித்தமை மூலம் போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு , எரிவாயு விலை அதிகரிப்பு ஆகிய விடயங்களும் பொருட்கள் மற்றும் சேவை மீதான விலை அதிகரிப்பிற்கான காரணிகளாக அமைந்துள்ளன.
Post a Comment