6 மாதங்களுக்குள் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேரிடும், சர்வதேசத்துடன் இணக்கமாக செயற்பட வேண்டிய தருணம் இது
பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள தவறினால் எதிர்வரும் 6 மாதங்களுக்குள் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேரிடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெற முடிந்தால், சுமார் 3 பில்லியன் டொலர்கள் (நட்பு நாடுகளிடமிருந்து) கிடைக்கும். இப்போது நாங்கள் எதிர்பார்த்தபடி நட்பு நாடுகளிடம் இருந்து பணம் பெறவில்லை.
எங்களிடம் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் டொலர் அளவு உள்ளது. அந்தத் தொகையை இறக்குமதிக்கு மட்டுமே செலவிட முடியும் என ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
கடனை செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ள போதிலும், அனைத்து கடன்களையும் நாங்கள் நிறுத்தவில்லை என அவர் வலியுறுத்தியுள்ளார். உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றில் பெற்ற கடன்களை நிறுத்த முடியாது.
எந்த நிலையிலும் நாம் அந்தக் கடனை அடைக்க வேண்டும். அந்தக் கடனை அடைக்க, ஏற்றுமதியிலிருந்து ஆண்டுதோறும் பெறும் பணத்தையும், உலக வங்கியுடன் நாங்கள் முன்பு கையெழுத்திட்ட கடன் ஒப்பந்தங்களையும் பயன்படுத்த வேண்டும்.
அப்படியென்றால் சர்வதேச பிரச்சனையை உருவாக்க இது நமக்கு வாய்ப்பில்லை. சர்வதேச சமூகத்துடன் இணக்கமாக செயற்பட வேண்டிய தருணம் இது என ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தினார்.
Post a Comment