Header Ads



கோட்டா எனும் பேயைக் கண்டு, 69 இலட்சம் பேர் ஏமாந்து போன கதை


நாகரீகங்களின் மோதல் (The clash of civilizations) என்ற நூலில் அமெரிக்க ஆய்வாளர் இப்படி எழுதுகிறார் "இந்தப் புதிய உலகத்தில் அரசியலில் சர்வதேச ரீதியில் நாகரீகங்களை மோத விட்டும், உள் நாட்டில் இனங்களை மோத விட்டுமே அரசியல்வாதிகள் வெற்றி பெறுகிறார்கள்" - 

சாமுவேல் பீ ஹண்டிங்டன் (2019)

இதுவே கோத்தாவின் திட்டமும். கோத்தா என்பது ஓர் அணி.  கோத்தா - மயிந்தை ஒரு குடும்பமாக அரசியல் செய்யுமளவு சிங்கள மக்கள் மத்தியிலே பெரிதாக தனித் திறமை (skilled) வாய்ந்த அதிமனிதர்களாக (superman) உள்ள ஒரு குடும்பமல்ல. நாயக்கர் குடும்ப மரபை உடைய உயர் குல (elite) சிங்களவர் மத்தியிலே செல்வாக்குச் செலுத்தும் எதுவுமே ராஜபக்சக்களிடம் இல்லை. ஆனால் அவர்களிடம் நிறைவான மாயை அரசியல் குணம் நிறையவே இருந்தது. அவர்களின் அரசியல் வேட்கையை (politics of desire) முஸ்லிம் எதிர்ப்பாளர்கள் என்ற மாயை ஊடாக பௌத்த சிங்கள மக்களுக்குள் நன்கு நிறுவி விட்டார்கள். புனைவுகள் (fictions) மனிதன் உலகை விளங்கிக் கொள்கிறான் என்ற அ. மாக்ஸ் அவர்களின் கூற்றை கோட்டா அணியினர் உண்மையாக்கினர்.


கீழைத்தேய அரசியலில் நின்று உலாவும் பொய்மை, மதம், சாதி, பிரதேச வெறிக் கோசங்களென்பன ராஜபக்சகளுக்கு என்றும் இனிப்பானவை. இலங்கையின் ஈழப் போர் இருக்கும் போதே சந்திரிக்கா என்ற பெண் ஜனாதிபதியின் காலத்தில் தான் இவர்கள் மயிந்தை தோன்றினார். இவர் மாத்தறை மாவட்டத்திற்கு மட்டுமாக இருந்து சந்திரிக்காவால் தேசியரீதியில் சந்தைப் படுத்தப் பட்டார் நாகரீகத் தோற்றம் இல்லாத, பெருத்த மீசையை உடைய, பாரம்பரிய உடை அணிந்த ஒரு நாயக்கர் வம்சமல்லாதவராக மயிந்தை வந்தார்.


நகரவாசிப் (urbounized) படித்த சிங்களவர் மத்தியிலே எடுபடாத ஒரு கிராமியக் குடும்பமான மயிந்தர் குடும்பம் பிரபாகரனைத் தோற்கடித்தது முதல் வீர #மாராஜாவாகத் தொடங்கினர். என்றாலும் துரதிஷ்டவசமாகப் பிரபா இறக்க, வேறொரு பலமான எதிரியைத் தேடினர் சிங்கள அரசியல் முகம். அப்போது இலகுவாக மாட்டிக் கொண்டதே ஆகவும் குறைந்த சிறுபான்மையான (absolute minority) முஸ்லிம் சமூகம். 


தன்னிடம் விஷேட திறமைகள் இல்லாத போதும் இவர்கள் சிங்கள சமூகத்தின் மத்தியில் முஸ்லிம் சமூகத்தை எதிரியாகச் சித்தரித்தார்கள். "மிகவும் வேகமாகப் பரவி வரும் இஸ்லாமிய மதம் விரைவில் பௌத்த மதத்தை இலங்கையிலிருந்து துடைத்தெறிந்து விடப் போகிறது, இதை இப்போதே தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாது போனால் மிக விரைவில் இலங்கை ஒர் இஸ்லாமியர் தேசமென மாறி விடும்" என்று எந்த விஞ்ஞானபூர்வமுமில்லாத (nonscientific) கதைகளைக் கட்டி விட்டார்கள். அதற்கு சம்பிக்க ரணவக்க, வேறு சில பௌத்த பிக்குகளும் துணை போனார்கள். இங்கு சிங்கள சமூகத்தின் மத்தியில் ஒரு பிரிவினர் அறிவியல் ரீதியாகவும் (moral), இன்னொரு பகுதியினர் செயற்பாட்டு ரீதியிலும் (practicaly) கோத்தா கொள்கையை பரப்பிக் பொண்டிருந்தார்கள். செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள் எதுவென்றாலும் சித்தரிக்கப்பட்ட (imagination) இஸ்லாமிய எதிரியை வெற்றி கொள்ளும் சக்தி #கோத்தாவே என்ற பெரும் மாயையை சிங்கள மக்களின் வாய்களில் தீத்தி விட்டார்கள். மூட நம்பிக்கைகள், கிராமிய மரபு வழிக்கதைகளை இலகுவில் நம்பி விடும் அதிகமான பௌத்த சித்தாந்த வழி சிங்கள மக்கள் இலகுவாக ஏமாந்து போனார்கள். முஸ்லிம்களே தங்களின் முதல் நிலை (first) எதிரிகள் என ஆழ வேரூன்றிக் கொண்டார்கள்.


ஆட்சியைப் பிடிக்கத் திட்டமிட்ட சூழ்ச்சி

-----------------------------------------------------------------------

சித்தரிக்கப் பட்ட பிரதான அரசியல் எதிரியாகிய இஸ்லாமிய மதத்தை பல வழிகளிலும் சிங்கள ஊர்களில் திட்டமிட்டு தூற்றலாகினர். அதற்காக சிங்கள ஊடகங்கள், சில பௌத்த மதகுருக்கள், சில இஸ்லாமிய மத செயற்பாட்டாளர்கள், அறிவு குறைந்த பௌத்த இளைஞர்கள், அண்மைக் காலம் முதல் சமூக ஊடகங்கள் எனப் பலரையும் இரகசியமாக கோட்டா அணி பயன்படுத்தியது. சிங்கள சமூகம் பகுத்தறிவை ஒரு கட்டத்தில் மறுத்தே விட்டது (mysticism). இதை டொக்டர் ஷாபி விடயத்திலே கண்டோம். இன்றுவரை ஷாபியின் கருத்தடை சத்திர சிகிச்சையை மக்கள் மத்தியிலே நியாயப் படுத்துவதற்கு (public legitimation) நம்மால் முடியாமலேயே உள்ளது.


இதில் புதுமையான விடயம் என்னவெனில் சில இஸ்லாமியர் இன்று வரை அவர்களுக்கே விளங்கிக் கொள்ள முடியாத அளவில் கோத்தா அணியினால் பயன்படுத்தப் பட்டார்கள் என்பது தான். உதாரணமாக குறை அறிவுடைய இஸ்லாமிய இயக்கங்களினால் (கூடுதலாக தீவிர (traddical) தௌஹீத் அமைப்புக்களே ஏதாவது இஸ்லாத்திலே தேவை இல்லாத (குறை பெறுமதியுடைய மத விடயத்துக்கு கூடுதல் பெறுமதி கொடுப்பது உதாரணமாக ஒரு சுன்னத்தான விடயத்துக்கு பர்ழையும் தாண்டிய மதிப்பளிப்பது) மத சார் விடயம் ஒன்றை தூக்கிப் பிடிக்கச் செய்து, அதைப் பௌத்த மக்கள் மத்தியில் பேச வைப்பது. இந்த செயற்பாடுகளில் அவர்களுக்கே தெரியாமல் பயன்படுத்ப் பட்டவர்களே சில தௌஹீத் ஜமாஅத்கள். ஒரு முறை றாசீக் என்ற ஒருவரால் கௌதம புத்தரே மாட்டிறைச்சி சாப்பிட்டதாகச் சொல்லி புரழியைக் கிழப்பி, அது நீதிமன்ற வழக்கு வரை போனது. இப்படியான செயற்பாடுகள் சிங்கள மக்களின் கோபத்தைக் கிளறி விட்டது. 


2015 ல் மயிந்தையிடம் இருந்து ஆட்சி பறி போனதும், மீளவும் ஆட்சிக்கு வர பொதுபலசேனா, இராவணா பல, மகாசன்பலகாய, சிங்க லே எனப் பல பௌத்த அடிமட்ட மோட்டு இளைஞர்களையும், தீவிர போக்குடைய பிக்குகளையும் இவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். நல்லாட்சி என்று சொல்லப் பட்ட மிதவாதப் போக்குடைய ரணிலின் ஆட்சியில் பல வழிகளில் இவர்கள் திரை மறைவுக் காய்களை உருட்டிக் கொண்டார்கள். பௌத்த ஆலயங்களையும், மதகுருக்களையும் வெளிப்படையாகவே இஸ்லாத்தை எதிர்த்து கதை கட்ட விட்டார்கள், செலவு செய்தார்கள். இந்த நேரத்தில் இந்தியாவில் ஏற்பட்ட மோடியின் இஸ்லாமிய எதிர்ப்பு ஆட்சியும் இவர்களுக்கு சாதகத்தை ஏற்படுத்தலானது.


ஒரு பக்கம் முஸ்லிம் அமைப்புக்களின் தீவிர மத செயற்பாடுகள், மறு பக்கம் பௌத்த அமைப்புக்களின் எதிர்ப் பிரச்சாரம் என எல்லாமே கோட்டா, கோட்டா என ஒலித்துக் கொண்டே வந்தது. இடையில் திகன, அம்பாரை, ஜிந்தோட்டை, மினுவங்கொட எனப் பல முஸ்லிம் எதிர்ப்பு செயற்பாடுகள் தீவிரமாக்கப் பட்டன, ஈற்றில் வந்தான் சஹரான் என்ற ஒரு மோடயன். கிறித்தவ ஆலயங்களில் புகுந்து வெடித்தார்கள் அவனோடு பல முஸ்லிம் பேர் தாங்கிகள். வென்றான் "வெடகருவா". தோற்றது தேசம்.


#கோட்டா_அணியின்_பங்காளர்கள்.

-----------------------------------------------------------------

கோட்டாவை பெருவாரியாக ஆதரித்த சிங்கள மக்கள், ஏனைய சிறுபான்மை மக்களென மொட்டு அணியில் இணைந்து அரசியல் செய்தவர்களில் சிங்கள மக்களில் #இரண்டு வகையாக நோக்கலாம். 


கோட்டாவை ஆதரித்த சிங்கள மக்கள்

----------------------------------------------------------------------

* ஒன்று ராஜபக்சக்களின் உண்மை முகத்தை தெரிந்து கொள்ளாமலே அவர்களை நல்லவர்கள் என்றும், அவர்களின் மாயாஜாலங்களை நம்பி ஏமாந்து போன பௌத்த சகோதரர்கள். இவர்கள் கோத்தா அணியே பௌத்த மதத்தைக் காப்போர் என்றும், நம்பினார்கள். இவர்கள் அப்பாவிகள் நன்கு பயன்படுத்ப் பட்டவர்கள். இவர்களே நமது பள்ளிவாசல்களை உடைக்கவும், முஸ்லிம் கடைகளை எரிக்கவும், கொத்து ரொட்டியிலே கருத்தடை செய்கிறார்கள் என்ற பஞ்ச தந்திரக் கதைகளை நம்பிய கூட்டத்தார். இவர்களுக்குத் திரைமறைவு அரசியல், பாஸ்க்கு இரிதா பற்றி ஒன்றுமே தெரியாது அப்பிராணிகள். இன்று அவரை "வீட்டுக்குப் போ" என்று கத்தி தங்களின் தவறை நிவர்த்திக்கப் போராடுவோரும் இவர்களே. கோட்டாவுக்கு வாக்களிக்காதோர் பெரும்பாலும் பார்வையாளர்களாக சும்மா இருக்கிறார்கள்.இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டிய விடயம் ஒன்று என்ன தெரியுமா? அன்று முஸ்லிம் கடைகளை, பள்ளிவாசல்களை உடைப்பதற்கு கோத்தாவாதிகளால் பயிற்சி அளிக்கப் பட்டவர்களே இன்று "அரகலய" என்ற புனிதப் போரை கோட்டா பக்கமே திரும்பிச் செய்கிறார்கள்


* கோட்டாவை ஆதரித்த சிங்களவர்களில் அடுத்தவர்கள் ராஜபக்சக்களின் அடாவடி, திருவிளையாடல்களை நன்கு அறிந்து அவர்களோடு இணைந்து செயற்பட்டோர். இவர்கள் ராசபக்சகளின் இரகசிய பங்காளிகள். இவர்கள் உண்மையாக நாட்டை ஏமாற்றிய பாவிகள். சுயநல வெறி கொண்டோர். இந்த நாட்டில் இல்லாத ஓர் எதிரியான முழு மொத்த முஸ்லிம் சிறுபான்மையையும் சஹரான் என்ற கொலைகாரனோடு கற்பனை செய்து அவர்களை வீழ்த்த வேண்டும் எனப் புறப்பட்டோர். 


முஸ்லிம்களின் உண்மை நிலை

---------------------------------------------------------

வெறும் புரியாணியை சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும், அல்லது எதையாவது வாங்கி விற்பனை செய்து குடும்பத்தை மட்டுமே கவனித்துக் கொண்டு வாழும் சமூகமே முஸ்லிம் சமூகம்.


இவர்கள் இலங்கைக்கு எதிராகப் போராடும் சமூகம் என்ற கதையை பௌத்த மக்கள் நம்பினால் அதை விட அவர்களின் மடமை ஒன்றுமே இருக்காது. கல்வி, அரசியல் சமூக விடுதலை என்பதெல்லாம் இலங்கை முஸ்லிம் களுக்கு வேப்பங் காய் தான் என்பதை உள்ளே வந்து பார்த்தால் புரிந்து கொள்வீர்கள். சேர்ந்து சாப்பாடு சமைத்து உண்பது, கேளிக்கை விளையாட்டுகளை ஆடுவதெனின் இலங்கை முஸ்லிம்கள் கெட்டிக் காரர்கள். ஆனால் போராட்டமெல்லாம் எங்கள் அகராதியில் இல்லை. அரசியலுக்காக பௌத்தர்களிடம் சித்தரிக்கப்பட்டதெற்கு உரிய எதிர் மரபை (counter enlightenment) உடையதே இலங்கை முஸ்லிம்கள்.


* சிறுபான்மையிலிருந்து கோட்டாவை ஆதரித்தோர்

---------------------------------------------------------------------

பௌத்தர்கள் கோட்டாவை ஆதரித்தது ஒரு வகையில் நியாயம். முஸ்லிம்களில் ஏன் ஆதரித்தார்கள் என்பதை இது வரை அறிய முடிய வில்லை. என்றாலும் சிறுபான்மையான தமிழர் தரப்பிலும், முஸ்லிம் தரப்பிலும் கோத்தாவை ஆதரித்தோர் குறைவு. என்றாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் செயற்பாட்டில் அதிருப்தி கொண்ட தமிழர் அணியும், 


SLMC, ACMC ஆகிய முஸ்லிம் கட்சிகளினால் அதிருப்தி கொண்ட முஸ்லிம் தரப்பும் (சில ஊர்கள்) கோத்தாவிடம் தஞ்சமடையலானார்கள். அத்துடன் பதவி வெறியர்களும், படித்த ஒரு சிலர் அவர்களின் பதவிகளை காத்துக் கொள்ளவும் என எப்போதுமே எமக்குள் உள்ள கூஜா தூக்கிகள் எல்லோருமே கோட்டாவாதிகளாயினர்.


இது ஒரு வகையில் முஸ்லிம் தரப்புக்கு நன்மை பயத்தது எனலாம். எப்படி தெரியுமா? முஸ்லிம் எதிர்ப்பை கோத்தா அணியினால் நேரடியாகவும், அவசரமாகவும் செய்யாது, ஓர் இணக்கப் பாட்டுடன் செய்ய வேண்டிய நிலை வந்தது. அப்போது தாங்கள் முழு மொத்த முஸ்லிம்களினதும் எதிரிகள் அல்லர், தாங்கள் பாரம்பரிய (tradditional) முஸ்லிம்களின் நண்பர்களே என சருவதேசத்துக்கும் கூட காட்ட வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் ஹலால், ஹீஜாப், சரியா போன்ற முஸ்லிம் கொள்கைகளை அழித்து விட கோத்தாவாவால் முடிய வில்லை, அல்லது அது தாமதமானது எனலாம்.


* முடிவு

-------------

இலங்கை அரசியல் மரபில் வந்த மிகப் பெரிய சக்தியே கோத்தா. 69 இலட்சம் பேரின் பலமான தெரிவு அவர். பௌத்தர்களே பெருவாரி ஆதரவாளர்கள். அவர்களின் குடும்ப அரசியல் அமைப்பில் ஆச்சரியமான ஓர் சீர்மை (uniformity) இருந்தது. அது இலகுவில் உடைந்து போகும் என யாராலும் நம்ப முடிய வில்லை. எதிரிகள் கூட "30 வருடங்களாவது ஆட்சியில் நிலைக்கும் குடும்பம்" என நம்பி போய் ஒட்டிக் கொள்ளலாயினர். இத்தகைய முன் தீர்ப்புடன் (apriori judgment) தான் நானும் இருந்தேன். அந்தப் பகுத்தறிவுத் தன்னிலையை (subject of reason) உடைத்தெறிந்தது எந்த சக்தி? என்பதை இவர்களை ஆதரித்த, ஆதரிக்காத இலங்கை மக்களால் இன்று நினைத்துக் கூடப் மார்க்க முடிய வில்லை. 


ஆம் கோட்டாவை 2 1/2 வருடத்திற்குள் துடைத்தெறிந்தவர் யார்? அது எந்த சக்தி? என்பதே என் போன்றவர்களின் விடைகளற்ற வினா.


கோத்தா ஆட்சியை கைப்பற்றியது முதல் 2015 மயிந்தர் ஆட்சி பறி போகும் போது இருந்த, அதே நிலதாரிகளையே (officers) கோத்தாவும் நியமிக்கலானார். அதுவே அவரின் கெட்ட கால ஆரம்பம் எனலாம். பல ஊழல்வாதிகளும், நிருவாகத் திறனில்லாதவர்களும், விடய அறிவற்றவர்களும் (subject knowledge) பதவியில் அமர்ந்தார்கள். "பழைய குருடி கதவைத் திறடி" ஆட்சி அரகலயால் தோற்றுப் போனது. #கோட்டா எங்கே? காணவில்லை. நாமெல்லாம் நாமாகவே இருக்கிறோம்.


ஏ.எல்.நௌபீர்.

No comments

Powered by Blogger.