நாட்டின் பணவீக்கம் 54.6 சதவீதமாக அதிகரிப்பு
நாட்டில் ஜீன் மாத பணவீக்கம் 54.6 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, உணவு பணவீக்கம், 80.1 சதவீதமாகவும், உணவல்லா பணவீக்கம் 42.4 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
மேலும், போக்குவரத்து பணவீக்கம் 128 சதவீதமாகவும், ஆடைகள் மற்றும் பாதணிகளுடன் தொடர்புடைய பணவீக்கம், 44.4 சதவீதமாகவும் உயர்வடைந்துள்ளது.
Post a Comment