Header Ads



பாணின் விலையை 50 ரூபாவினால் குறைக்க முடியும், டீசல் விலையை 20 ரூபாவால் குறைத்தது நகைப்புக்குரியது


டீசல், எரிவாயு, கோதுமை மா ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்படுமானால் பாண் இறாத்தல் ஒன்றின் விலையை 50 ரூபாவினால் குறைக்க முடியும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார். 

120 ரூபாவிற்கு காணப்பட்ட டீசல் லீற்றர் ஒன்றின் விலையை 460 ரூபாவாக அதிகரித்து தற்போது அதில் 20 ரூபாவை அரசாங்கம் குறைத்துள்ளது. இது ஒரு நகைப்புக்குரிய விடயமாகும். 

எனவே, அதிகரிக்கப்பட்ட எரிவாயு கொள்கலன் விலை, கோதுமை மா மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகளை குறைக்குமாறு தாம் அரசாங்கத்தை கோருகிறோம். 

இதுதவிர, மண்ணெண்ணெயை தொடர்ச்சியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமானால் பாண் இறாத்தல் ஒன்றின் விலையை 50 ரூபாவாலும், ஏனைய வெதுப்பக உற்பத்தி உணவு பண்டங்களின் விலையை 25 ரூபாவாலும் குறைக்க முடியும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.