சட்டத்தில் ஓட்டை - 385 லீற்றர் டீசலுடன் பிடிபட்ட தொழிலதிபர் விடுதலை
(மனோபிரியா குணசேகர)
சட்டவிரோதமான முறையில் டீசல் கையிருப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வர்த்தகர் ஒருவரை விடுதலை செய்த மஹர மேலதிக நீதவான் திருமதி ஜனனி பெரேரா, குறித்த வர்த்தகரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டீசல் கையிருப்பை சப்புகஸ்கந்த பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
பெட்ரோலிய சட்டத்தில் டீசல் வைத்திருப்பது குற்றம் என்று குறிப்பிடப்படாததால், பொலிஸார் தங்கள் கட்சிக்காரர் மீது வழக்குப்பதிவு செய்ய முடியாத நிலையில், வழக்கு பதிவு செய்யாமல் அவரை விடுதலை செய்யுமாறு சட்டத்தரணி திரு. பிரதீப் கமகே விடுத்த கோரிக்கையை நீதவான் ஏற்றுக் கொண்டமையால் மேற்படி வர்த்தகரை விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.
மேலும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட டீசல் கையிருப்பை சட்டத்தரணி கமகே திருப்பித் தருமாறு கூறினார்.
மாகொல நாலக எண்டர்பிரைசஸ் உரிமையாளரான வர்த்தகர் திரு.நாலக ஹெட்டியாராச்சி விடுவிக்கப்பட்டார்.
சட்டவிரோதமான முறையில் 385 லீற்றர் டீசல் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சப்-இன்ஸ்பெக்டர் எம்.ஏ.எல். பிரமோத் மற்றும் ஏனைய அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் திரு.நாலக ஹெட்டியாராச்சியை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
சட்டத்தரணி திருமதி விரேந்த கனங்கேவுடன் ஆஜரான சட்டத்தரணி திரு. பிரதீப் கமகே, எரிபொருள்களை அருகில் வைத்திருப்பது குற்றமாகும் என பெற்றோலிய சட்டத்தில் குறிப்பிடப்படாத நிலையில், தனது கட்சிக்காரருக்கு எதிராக வழக்குத் தொடர பொலிஸாருக்குத் தகுதியில்லை என்ற உண்மைகளை முன்வைத்தார். .
Post a Comment