ரணிலின் சவாலை வெற்றி கொண்டார் சஜித்
நாட்டில் பாரியளவில் மருந்து தட்டுப்பாடு இருக்கும் தருவாயில் டொலர் தட்டுப்பாடே இதற்கு காரணமென பலரது கருத்தாக இருப்பினும், உண்மையான காரணம் என்னவெனில், அதற்கான தகவல் தரவுகளை களஞ்சியப்படுவதிலுள்ள சிக்கலே எனவும், தெரிந்து கொண்டே இதற்கு மேலும் மக்களுக்கு பொய்யுரைக்காமல் தற்போதுள்ள செயல்முறைகளை சரிவர செயற்திறன்மிக்கதாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
நாட்டில் நிலவும் மருந்துப் பற்றாக்குறையை போக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், சேனக பிபிலேயின் ஔடத கொள்கையை அமுல்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், கடந்த ஆட்சியில் சுகாதாரத்துறையில் பாரியளவிலான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். அத்துடன் மருந்துப் பற்றாக்குறைக்கு காரணம் டொலர் தட்டுப்பாடு அல்ல எனவும், நிறுவனங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பிலுள்ள குறைப்பாடும் தொடர் கண்காணிப்பு இல்லாதமையே இதற்கு நேரடிக் காரணம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.
அத்துடன் எதிர்க்கட்சி என்ற வகையில் அதிகாரம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நாட்டுக்கு சேவை செய்வோம் என்றும், ஹுஸ்ம திட்டத்தின் ஊடாகவே 74 ஆண்டுகளுக்குப் பிறகு செயற்திறன்மிக்க எதிர்க்கட்சியொன்று உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆரோக்கியமான தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கில் 'ஜன சுவய' மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் மூச்சு' வேலைத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதோடு,இதன் பிரகாரம் இருதய நோய்களுக்கான இன்றியமையாத மருந்தான Recombinant Streptokinase (IP 1500000IU) என்ற தடுப்பூசிக்கு நாட்டில் பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக மருத்துவர் அன்வர் ஹம்தானி தெரிவித்திருந்தார்.
இது குறித்து மே 18, 2022 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் விசேட அவதானம் செலுத்தப்பட்டது.
இந்நாட்டில் மேற்குறிப்பிட்ட மருந்துகளின் கையிருப்பு குறைவாக இருப்பதாகவும், முடிந்தால் "ஹுஸ்ம" திட்டத்தின் மூலம் குறித்த மருந்துகளை இறக்குமதி செய்து தாருமாறு பிரதமர் சவால் விடுத்த வன்னம் கோரியிருந்தார்.
இந்நாட்டிலுள்ள மக்களின் வாழ்க்கையைப் பாதுகாக்கும் பாரிய பொறுப்பு எமக்கு உள்ளதோடு,முடிந்தவரை அதனை நிறைவேற்றுவதற்கு நாங்கள் தயாராகவும் உள்ளோம்.
இதன்படி குறித்த மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக முன்னெடுத்த முயற்சிக்கு பலன் சேர்க்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவரின் நிறைவேற்று ஒருங்கிணைப்பாளர் திரு.நயன வாசலதிலக அவர்களின் பூரண ஆதரவுடன், 15.6 மில்லியன் ரூபா ($42,840) பெறுமதியான Recombinant Streptokinase (IP 1500000IU) என்ற 4000 தடுப்பூசிகள் விசேட மருத்துவ நிபுணர் அன்வர் ஹம்தானிக்கு இன்று(06) எதிர்க்கட்சித் தலைவர் நன்கொடையாக வழங்கி வைத்தார்.
ரீகாம்பினன்ட் ஸ்ட்ரெப்டோகினேஸ் (Recombinant Streptokinase) என்பது வாழ்க்கைக்கும் இறப்புக்கும் இடையே ஒரு சிக்கலான சூழ்நிலையை எதிர்கொள்ளும் இருதய நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற இன்றியமையாது உதவும் ஒரு மருந்தாகும்.
வாழ்வாதாரத்துக்குப் போராடும் மக்களுக்கு சுகாதார ரீதியான நிவாரணம் வழங்குவதற்காக,ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள், அங்கத்தவர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிநாட்டுக் கிளைகள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஆதரவாளர்கள் மற்றும் "ஜனசுவய" செயற்திட்டமும் இணைந்து “ஐக்கிய மக்கள் சக்தியிடமிருந்து ஓர் மூச்சு” திட்டம் செயல்படுத்துகிறது.
இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் கோவிட் தொற்றுக்குள்ளான சந்தர்ப்பத்தில் அவருக்கு சிகிச்சையளித்த வைத்தியர்கள் குழாமும் இணைந்து கொண்டனர்.
Post a Comment