ஆறு மாதங்களில் 1486 மருத்துவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றம்
2022 ஆம் ஆண்டில் கடந்த ஆறு மாதங்களில் சுமார் ஆயிரத்து 500 மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த ஆறு மாதங்களில் ஆயிரத்து 486 மருத்துவர்கள் சிறப்பு நிலை சான்றிதழ்களை கோரி இலங்கை மருத்துவப் பேரவையில் விண்ணப்பித்துள்ளனர்.
ஜூன் மாதத்தில் மாத்திரம் 449 பேர்
ஜனவரி மாதம் 138 பேரும், பெப்ரவரி மாதம் 172 பேரும்,மார்ச் மாதம் 198 பேரும், ஏப்ரல் மாதம்214 பேரும், மே மாதம் 315 பேரும் ஜூன் மாதம் 449 பேரும் என மொதத்தமாக கடந்த ஆறு மாதங்களில் ஆயிரத்து 486 மருத்துவர்கள், இலங்கை மருத்துவப் பேரவையில் சான்றிதழ்களை கோரி விண்ணப்பித்துள்ளதாகவும் ஹர்ச டி சில்வாவின் டுவிட்டர் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment