சஜித் தரப்பின் 14 வாக்குகளும், TNA யின் 5 வாக்குகளும் ரணிலுக்கு கிடைத்தன - ஹரீன்
ஐக்கிய மக்கள் சக்தியின் 14க்கும் மேற்பட்ட வாக்குகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குறைந்தது 5 வாக்குகள் ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்று கிடைக்கப்பெற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவிக்கு தெரிவானதுடன் நாட்டுக்குள் புதிய எதிர்பார்ப்பு உருவாகும் எனவும் ஹரின் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று -20- நடைபெற்ற ஜனாதிபதி தெரிவு செய்யும் வாக்கெடுப்புக்கு பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
வெட்கம், அச்சம் என்றே தற்போது கூற வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். ஆசை, ஆனால் பயம் அல்ல. தற்போது பெரிய சவால் இருக்கின்றது. ரணில் விக்ரமசிங்கவின் தலைவிதியில் எழுதப்பட்ட ஒன்று நிறைவேறியுள்ளது என்று நினைக்கின்றேன்.
இலங்கையில் புதிய எதிர்பார்ப்பு ஏற்படும் என எண்ணுகிறேன். நாட்டுக்கு தற்போது அனுபவமுள்ள தலைவர் இருக்கின்றார். அனுபவமுள்ள தலைவர் மூலம் நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என எதிர்பார்க்கின்றேன்.
அனைவரும் இணைந்தால், தேசிய அரசாங்கம் அமையும். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான பிரதான எதிர்க்கட்சிக்கு ஜனாதிபதி பகிரங்க அழைப்பை விடுத்துள்ளார்.
காலை பிடித்து இழுக்காது, தமது வாக்குகளை பற்றி சிந்தித்து செயற்படுவாரா அல்லது நாட்டை பற்றி சிந்தித்து செயற்படுவாரா என்பதை பார்ப்போம். புதிய ஜனாதிபதி நாளை நாடாளுமன்றத்தில் பதவிப்பிரமாணம் செய்வார்.
நாட்டுக்கு புதிய எதிர்ப்பார்ப்பும், நம்பிகையும் ஏற்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்கவை கைவிட்டு நாங்களும் சென்றோம், மீண்டும் அவரிடம் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதான் விதி என்பது.
Post a Comment